கேது பெயர்ச்சி 2025: தொழிலில் வெற்றி பெறும் 3 ராசிகள்.. பண மழை கொட்டப் போகுது

post-img
கேது பெயர்ச்சி 2025: புத்தாண்டில் ராகு மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளன. அந்த வகையில், கேது பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போகும் ராசிகள் எது, எந்தெந்த ராசிகள் நற்பலன்களையும், யோகங்களையும் அனுபவிக்கவுள்ளனர் என்று விரிவாகப் பார்க்கலாம்..(Rahu ketu peyarchi 2025) 2025 புத்தாண்டின் சிறப்பாக சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று முக்கியமான கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இருள் கிரகம், நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகுவும், கேதுவும் 2025 ஆம் ஆண்டில் மே 18 ஆம் தேதி தங்களுடைய இடத்தை மாற்றுகின்றன. பாம்பு கிரகங்களான இந்த கிரகங்கள் பெரும்பாலும் அசுப பலன்களைத் தான் தரும். சில சமயங்களில் இந்த கிரகங்கள் அமரும் ராசியைப் பொருத்து நல்ல பலன்களும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. நவக்கிரகங்களில் ராகு கேது பகவான் அசுப கிரகமாக விளங்குவதால் எப்போதுமே பின்னோக்கிய பயணத்திலேயே இருப்பார். மற்ற கிரகங்களைப் போல நேர்ப் பாதையில் பயணிக்காது. ராகு கேது கிரகங்கள் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருக்கும். தற்போது ராகு மற்றும் கேது, மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணித்து வருகின்றனர். 2025 ஆம் ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி மே மாதத்தில் நிகழும்போது ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். கேது சிம்ம ராசிக்குள் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இந்த கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் ஆண்டாக இருக்கும். அந்த வகையில், சிம்ம ராசிக்கு செல்லும் கேதுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் எவை என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மிதுன ராசி (Ketu peyarchi for midhunam): சிம்ம ராசிக்குள் நுழையும் கேது மிதுன ராசியின் மூன்றாவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால், உங்களுடைய வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் உண்டாகும். எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். நீண்டநாள்களாக ஆசைப்பட்ட அனைத்து விஷயங்களும் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. துலாம் ராசி (Ketu peyarchi for thulam): கேதுவின் இடப்பெயர்ச்சி காரணமாக துலாம் ராசிக்கரார்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டப் போகிறது. துலாம் ராசியின் 11 ஆம் வீட்டிற்கு கேது செல்கிறார். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள், வங்கியில் பண இருப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் பெருகும், கையில் பணம் தங்கும். கடன்களை அடைப்பதில் வேகமாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. மீன ராசி (Ketu peyarchi for Meenam): கேதுவின் பெயர்ச்சியால் மீன ராசியின் ஆறாம் வீட்டிற்கு கேது செல்கிறார். இந்தப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு 2025 மே மாதம் முதல் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் சிறப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. அலுவலகத்தில் இதுவரை மேற்கொண்டு வந்த கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீங்கள் செய்யும் வேலைகள் உங்களுக்கு பாராட்டையும், பதவி உயர்வையும் பெற்றுத் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, மனை போன்ற புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல்நலப் பிரச்னைகள் உருவாகும் வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விரய செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையில் உடல் நலன் குறித்த கவலை அதிகரிக்கும்.

Related Post