5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆல் பாஸ் முறை கிடையாது! மத்திய அரசு ஷாக் உத்தரவு

post-img
டெல்லி: இனி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை கிடையாது என்றும், இந்த முறை ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது. கற்றல் திறனை மேம்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை செயலாளர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக 2 மாதங்களில் துணை தேர்வு நடத்தப்படும். இதிலும் தோல்வியடைந்தால் மட்டுமே மாணவர்கள் அதே வகுப்பில் தொடர்வார்கள் என்று மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதியக் கல்விக்கொள்கையில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. இருப்பினும் இதனை அமல்படுத்தும் விதமாக தற்போது 5,8ம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது என கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

Related Post