LDL மற்றும் VLDL கொழுப்புகள் என்பவை கெட்ட கொழுப்புகளாக அறியப்படுபவை. இது நம் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். இவை கல்லீரலில் அப்படியே சேகரமாகிவிடும். கெட்ட கொழுப்புகள் நம் உடலில் அதிகமாக இருந்தால் இதய நோய்களும் தமனி தடிப்பு நோய்களும் வரக்கூடும்.
அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்தால் பல நோய்களிலிருந்து நாம் தப்பிக்கலாம். தற்போது மக்களிடத்தில் அதிகளவு கெட்ட கொழுப்பு காணப்படுகிறது. இவர்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிடுகிறார்கள், இவர்களின் அன்றாட பழக்க வழக்கங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.
LDL மற்றும் VLDL கொழுப்புகள் என்பவை கெட்ட கொழுப்புகளாக அறியப்படுபவை. இது நம் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். இவை கல்லீரலில் அப்படியே சேகரமாகிவிடும். கெட்ட கொழுப்புகள் நம் உடலில் அதிகமாக இருந்தால் இதய நோய்களும் தமனி தடிப்பு நோய்களும் வரக்கூடும். அகவே எது அதிக கொழுப்புள்ள உணவுகள் என்றும், அதை உணவில் சேர்த்துக் கொள்வதால் என்ன தீங்கு ஏற்படும் என்பதையும் உங்களுக்கு நாங்கள் கூற இருக்கிறோம்.
சூரியகாந்தி என்ணெய் : இந்த எண்ணெயை சமைக்கும் போது ஆக்ஸிஜினேற்றம் அடையும். அதோடு இதிலுள்ள ஓமேகா-6 ஃபேட்டி ஆசிட் நம் உடலுக்கு கேடுகளை தரக் கூடியது. இந்த ஃபேட்டி ஆசிட்களால் நமக்கு கல்லீரல் அழற்சி நோய் ஏற்படக் கூடும். மேலும் கல்லீரல் அழற்சி நீண்ட நாட்களாக இருந்தால் அது கெட்ட கொழுப்புகளை நமது உடலில் தேக்கி வைக்கும்.
மார்கரின் (செயற்கை வெண்ணெய்) : வெண்ணெய்க்கு பதிலாக இதை பயன்படுத்தலாம் என பலரும் நினைக்கின்றனர். நூறு சதவிகித சுத்தமான வெண்ணெயில் ‘கொழுப்பு’ மட்டுமே இருக்கும். நமது உடலில் உள்ள பல ஹார்மோன்கள் மற்றும் செல்களுக்கு இவை முக்கியமன ஊட்டச்சத்தாகும். இதனால் உடலில் கெட்ட கொழுப்புகள் உருவாகாது. ஆனால் மார்கரின் ஹைட்ரஜனேற்றப்பட்ட விதைகளின் எண்ணெயால் தயாரிக்கப்படுகிறது. இதிலும் அதே ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இதனால் நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேகரமாகி கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக கொழுப்புள்ள உணவுகளில் மார்கரின் (செயற்கை வெண்ணெய்) மிகவும் மோசமானதாகும்.
சாஃப்ளவர் ஆயில் : இந்த எண்ணெயும் அதிகளவு ஆக்சிஜனேற்றம் செயப்பட்ட கொழுப்பையும் உடலுக்கு பாதிபை ஏற்படுத்தும் ஒமேகா-6 ஃபேட்டி அசிட்களையும் கொண்டுள்ளது. விலங்குகளின் கொழுப்பில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட்கள் இருப்பதில்லை. ஆகையால் இவை நமக்கு அழற்சியை ஏற்படுத்துவதில்லை. கெட்ட கொழுப்பிற்கும் விலங்குகளின் கொழுப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கூறுவதையெல்லாம் நாம் நம்ப வேண்டிய அவசியமில்லை. அதிக கொழுப்புள்ள உணவுகளில் குஷிபி எண்ணெயும் மோசமான ஒன்றாகும்.
சாசேஜ் : இது நன்கு பதப்படுத்தப்பட்ட உணவாகும். இதில் பல செயற்கை பொருட்கள் சேர்க்கபட்டுள்ளன. இது நமக்கு அழற்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் புற்றுநோயை தூண்டக்கூடிய பொருட்களும் இருக்கலாம் எனக் கூறுகிறார்கள்.
சலாமி : இதுவும் பதப்படுத்தப்பட்ட உணவு தான். உங்கள் கல்லீரலையும் இதயத்தையும் பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது அதிக கொழுப்புள்ள உணவு இல்லையென்றாலும், உடலில் வேறு பிரச்சனைகளை இவை தூண்டக்கூடும்.
நல்லெண்ணெய் : இவை பெரும்பாலும் எல்லா பாக்கெட் உணவுகளிலும் சேர்க்கப்கின்றன. எள் விதையான இதில் ஓமேகா-6 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது நம் உடலில் கெட்ட கொழுப்புகள் உருவாக காரணமாக இருக்கும்.
வேர்க்கடலை எண்ணெய் : ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ஃபேட்டி அசிட்கள் இந்த எண்ணெயில் அதிகமாக உள்ளது. இது அழற்சியையும் கெட்ட கொழுப்பையும் உடலில் உருவாக்கும். மற்ற எண்ணெய்களைப் போலவே வேர்க்கடலை எண்ணெயையும் நாம் தவிர்க்க வேண்டும்.
பாமாயில் : பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளிலும் பிஸ்கட்களிலும் இந்த என்ணெய் அதிகமாக பயன்படுத்தபடுகிறது. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.
பால் சேர்க்கப்படாத ஐஸ்க்ரீம் : இது மார்கரின் போல் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்களால் தயாரிக்கபடுகிறது. இதிலும் ஓமேகா-6 ஃபேட்டி ஆசிட் உள்ளது. ஆகவே நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியல்களில் இதுவும் ஒன்றாகும்.
மதுபானம் : இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நேரடியாக பாதிக்காது. ஆனால் மறைமுகமாக பாதித்து உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கச் செய்யும். மேலும் தீவிர மதுப்பழக்கம் கல்லீரல் வீக்க நோயை உண்டாக்கும்.