வருமான வரி அலுவலகத்தில் வேலை! அதுவும் சென்னையிலேயே..

post-img

சென்னை: வருமான வரி அலுவலகத்தில் Young Professionals பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாகக்த்தில் உள்ள அலுவலகத்தில் பணி வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை கீழே காணலாம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திறமையான இளம் தொழில் வல்லுனர்கள் (Young Professionals) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, ஊதிய விவரம் உள்ளிட்டவற்றை காணலாம்.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து இளநிலை அல்லது முது நிலை சட்டம் பயின்று இருக்கவேண்டும். 3 வருட எல்.எல்.பி அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த எல்.எல்.பி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சார்ட்டர் அக்கவுண்ட் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?: இது முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலான பணி ஆகும். ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். திறமை மற்றும் செயல் திறன் அடிப்படையில் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படும். மாத ஊதியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். இதர சலுகைகள் எதுவும் கிடையாது.



காலிப்பணியிடங்கள்: 4 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணி அமர்த்தப்படுவர்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலேயே பணி இருக்கும். அக்கவுண்டன்சி மற்றும் சட்டம் படித்த திறமையான இளம் பட்டதாரிகள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். வருமான வரி தீர்ப்பாயத்தில் பதிவாகும் வழக்குகளுக்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில் பணி இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tnincometax.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Deputy Commissioner of Income-tax (Hqrs)(Admn),
Room No. 110, 1st Floor, O/o Pr. Chief Commissioner of Income-tax, TN&P
No. 121, M.G. Road, Nungambakkam,


விண்ணப்பிக்க கடைசி நாள்: அதேபோல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவற்றின் ஸ்கேன் செய்து [email protected] மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். மெயில் சப்ஜெக்ட்டில் "APPLICATION FOR YP" என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படும். இது குறித்த தகவல் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கே அனுப்பப்படும்.
விண்ணப்பங்கள் 11.09.2023 அன்று மாலை 6 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதன்பிறகு வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. தேர்வு குறித்த முழு விவரங்களையும் விண்ணப்ப படிவத்தையும் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் https://www.tnincometax.gov.in/upload/important_news/important_news-4757232747607.pdf
செய்யவும்.

 

Related Post