ரெடியா? இரவு 10 மணி வரை இடியுடன் மழை வெளுக்கும்.. 15 மாவட்டங்களுக்கு வார்னிங்..

post-img

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 4 (நாளை) முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அதாவது இன்று இரவு 10 மணி வரை இந்த 15 மாவட்டங்களில் லேசான இடியுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடும் என்றும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

Related Post