திருப்பரங்குன்றம் உச்சியில் சேவல், ஆடு? ஆர்டர் காப்பி எங்கே? சிக்கந்தர் பள்ளிவாசல் தர்கா பரபரப்பு

post-img
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கந்தூரி நடத்த ஆடு, சேவல்களுடன் சென்றவர் தடுத்து நிறுத்தப்பட்டதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என்று போலீசார் தடை விதிக்கப்பட்டதையடுத்து, தர்ணா போராட்டமும் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மல்லடிப்பட்டியை சேர்ந்தவர் சையது அபுதாஹிர்.. இவருக்கு 53 வயதாகிறது.. குடும்பத்தினருடன் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக ஒரு ஆடு, இரண்டு சேவல்களுடன் வந்தார். மலையடிவாரம்: ஆனால், மலை அடிவாரத்திலேயே இவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, ஆடு, சேவல்களை மலைமேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றார்கள்.. இதையொட்டி இரு தரப்பிலும் வாக்குவாதம் நடந்தது.. இதை பார்த்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அபுதாஹிருக்கு ஆதரவாக மலை படிக்கட்டு முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கணேசன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா மற்றும் காவல்துறை உதவி ஆணையர்கள் சீதாராமன், குருசாமி சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. எனினும் சமசரம் ஏற்படாததால், 50க்கும் மேற்பட்டோர் எதிர்த்து திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் வழியில் போலீஸாரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆடு, கோழிகள்: இதனையடுத்து ஆடு, சேவல்கள் கொண்டு வந்தோர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்யப்பட்டு தனியார் மகாலில் தங்க வைக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, பின்னர் திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் சொல்லும்போது, "ராஜபாளையத்தில் உள்ள மலப்பட்டியை சையது அபுதாகிர் என்பவர் தன்னுடைய குடும்பத்திருடன் சேர்ந்து கந்தூரி நேர்த்திக்கடன் செலுத்த ஆடு வெட்டுவதற்காக வந்திருந்தவர்களை ஆடுடன் வந்தார்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று சொல்லி போலீசார் அவர்களை தடுத்துள்ளனர். ஆர்டர் காபி: இது தொடர்பாக ஆர்டர் காப்பி உள்ளதா? என கேட்டதற்கு அவர்கள் தரவில்லை சில வருடங்களாகவே திருப்பரங்குன்றம் மலையை வைத்து சில அரசியல் நடைபெறுகிறது. 1920ல் லண்டனில் நடைபெற்ற வழக்கின் போது இந்த மலை எங்களுக்கு என தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு விஷயமும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் உரிமைகளை வாங்கி வருகிறோம். நாகூர் கோரிப்பாளையம் போல இங்கும் 400 ஆண்டுகளாக கந்தூரி வழிபாடு நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளித்ததால் அதிகாரிகள் எதிர்க்கிறார்களா என தெரியவில்லை. திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து ஜமாத் தார்களையும் அழைக்க உள்ளோம்" என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post