சத்தீஸ்கரின் அடுத்த முதல்வர் யார்? பாஜக போடும் மெகா பிளான்..

post-img

சென்னை: சத்தீஸ்கரின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. ராய்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கூட்டம் நடக்க உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபரா வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. இதன் மூலம் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2018 தேர்தலோடு ஒப்பிடுகையில் கையில் இருந்த 33 இடங்களை காங்கிரஸ் இழந்துள்ளது.
அதேபோல் பாஜக புதிதாக 39 இடங்களை கூடுதலாக பெற்றுள்ளது. கடந்த 2018 சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்றது. பெற்ற வாக்குகள் 61,36,429 (43.0%), பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பெற்ற வாக்குகள் 47,01,530 (33.0%). ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜேசிசி) 5 இடங்களில் வெற்றி பெற்றது. வாக்குகள் 10,81,760 (7.6%) , பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது வாக்குகள் 5,51,687 (3.9%).
தலைகீழ் மாற்றம்: தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இது தலைகீழாக மாறி, மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதன் மூலம் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.
இன்று கூட்டம்: சத்தீஸ்கரின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. ராய்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கூட்டம் நடக்க உள்ளது. ஏற்கனவே எம்எல்ஏவாக இருக்கும் ஒருவரே முதல்வர் ஆவார்.. வெளியே இருந்து ஒருவர் வந்து முதல்வர் ஆகி.. அதன்பி இடைத்தேர்தலை சந்தித்து எம்எல்ஏ ஆக வாய்ப்பு இல்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2000ம் ஆண்டு அம்மாநிலத்தின் முதல் முதல்வர் அஜித் ஜோகியும் (காங்கிரஸ்), 2வது முதல்வர் டாக்டர் ராமன் சிங்கும் (பாஜக) முதல்வராக பதவியேற்று, இடைத்தேர்தலுக்கு பின் எம்.எல்.ஏ., ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. . பாஜக ஆட்சிக்கு வந்தபோது ராமன் எம்எல்ஏவாக இருக்கவில்லை. இதுவரை சத்தீஸ்கரில் மூன்று தலைவர்கள் முதல்வர் நாற்காலியை எட்டியுள்ளனர். இதில், இருவர் இடைத்தேர்தல் மூலம் வென்று முதல்வர் இருக்கைக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும், கடந்த முறை 2018 தேர்தலில், இந்த பாரம்பரியத்தை முதல்வர் பூபேஷ் பாகேல் உடைத்தார். பதான் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்வரானார்.
நவ. 7 தேர்தல்: சத்தீஸ்கரின் 20 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 16- 18; அப்ப பாஜகவுக்கு? கடைசி பரபர சர்வே
பாஜக கூட்டம்: அதேபோல் இந்த முறையும் ஏற்கனவே எம்எல்ஏவாக இருக்கும் ஒருவரே முதல்வர் ஆவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூன்று பார்வையாளர்கள் - மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் சர்பானந்தா சோனோவால் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ராமன் சிங், ராம்விச்சார் நேதம், சரோஜ் பாண்டே, அருண் சாவ், ஓ.பி.சௌத்ரி, மற்றும் விஷ்ணு தியோ சாய் ஆகியோர் சத்தீஸ்கரில் முதல்வர் பதவிக்கு முன்னணியில் உள்ளனர். 2003 முதல் 2018 வரை மூன்று முறை முதல்வராக இருந்த ராமன் சிங்கை தேர்வு செய்யாவிட்டால், பாஜக ஓபிசி அல்லது பழங்குடியின முதல்வர் ஒருவரை தேர்வு செய்யும் என்று ஊகிக்கப்படுகிறது.

 

Related Post