"உடல்நிலை மோசம்.." ஐசியு பிரிவில் புகழ்பெற்ற தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனுக்கு சிகிச்சை!

post-img
இவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா குரேஷியும் ஒரு சிறந்த தபேலா கலைஞர். தனது ஆரம்பக் கல்வியை மாஹிமில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் முடித்த ஜாகிர் உசேன், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். 11 வயதில்: சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஜாகிர் உசேன், வெறும் 11 வயதில் அமெரிக்காவில் தனது முதல் கச்சேரியை வெற்றிகரமாக நடத்தினார். தந்தையுடன் அவர் அந்த இசைக் கச்சேரியை நடத்தி இருந்தார். அதில் தனக்குச் சம்பளமாக ஐந்து ரூபாய் வழங்கப்பட்டதாகப் பின்னர் ஒரு நேர்காணில் நினைவு கூர்ந்தார். வாழ்க்கையில் தான் பெற்ற அந்த ஐந்து ரூபாய்தான் மிக மதிப்புமிக்க சம்பாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆரம்ப நாட்களில் ஜாகிர் உசேனுக்கு கடுமையான நிதி நெருக்கடிகள் இருந்தன. இதனால் வேறு வேலை செய்யச் சொல்லிக் கூட பலரும் அறிவுறுத்தினர். இருப்பினும், அதை எல்லாம் தாண்டி இசைத் துறைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பொருளாதார சிக்கல் காரணமாக ஆரம்பக் காலத்தில் பல நாட்கள் அவர் ரயிலிஸேயே பயணித்தார். அப்போது சில நேரம் அவருக்கு இருக்கை கூட கிடைக்காது. அப்போதெல்லாம் செய்தித்தாளை விரித்து தரையிலேயே கூட படுத்துத் தூங்குவாராம். ஆனால், அப்போதும் தனது தபேலாவின் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்து கொள்வாராம். கை தேர்ந்தவர்: அவரது முதல் ஆல்பமான 'லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட்' (Living in the Material World) 1973ம் ஆண்டு வெளியானது. எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதில் இருந்து இசையை உருவாக்கும் வல்லமை கொண்டவர் ஜாகிர் உசேன். வீட்டின் சமையல் அறையில் உள்ள சாதாரண பொருட்களில் இருந்தும் கூட அட்டகாசமான இசையைக் கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். விருதுகள்: ஜாகிர் உசேன் இசைத் துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு 1988ம் ஆண்டு பத்மஸ்ரீ, 2002இல் பத்ம பூஷன் மற்றும் 2023இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், இவர் ஐந்து கிராமி விருதுகளைப் பெற்று இருக்கிறார். இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த 66வது கிராமி விருதுகள் விழாவில் கூட மூன்று விருதுகளைப் பெற்றார். இரங்கல்: 73 வயதான அவருக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாகக் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஐசியு பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Related Post