70 மணி நேர வேலை.. இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு இளம் பெண் தொழில் அதிபர் கொடுத்த தரமான பதில்

post-img
பெங்களூர்: வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதற்கு பலர் எதிர்வினை ஆற்றியுள்ளார்கள். இதற்கு தற்போது இம்செக்யூர் பாராமெசடிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இளம் தொழில் அதிபரான நமீதா தாபர் அதிரடியான பதில் கொடுத்துள்ளார். பெரிய நிறுவனங்களில் டன் கணக்கில் பணம் ஈட்டும் நிறுவன தலைவர்கள், தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் வேண்டுமானால் வாரம் 70 மணி நேரம் என்ன.. 24 மணி நேரம் கூட வேலை செய்யட்டும் என்று கூறினார். நாடு முன்னேற இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி அடிக்க வலியுறுத்தி வருகிறார். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி இது தொடர்பாக வெளியிட்ட ஆடியோ ஒன்றில், "உற்பத்தித் திறன் குறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது இந்தியா உலக அரங்கில் போட்டிபோட வேண்டுமானால் அதற்கேற்ப நாம் நாட்டு இளைஞர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டது" என்றார். முன்னதாக2020ல் பேசிய இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, "கோவிட் பெருந்தொற்றுக் காலத்திற்கு முந்தைய நிலைக்கு நாம் செல்ல வேண்டுமானால், இந்திய தொழில் வல்லுநர்கள் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும்" என கூறியிருந்தார். அண்மையில் நடந்த இந்திய வர்த்தக சபை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியிலும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி 70 மணி நேர வேலை கருத்தை வலியுறுத்தினார் . இதுபற்றி பேசும் போத, “இந்தியர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அவர்கள் எண்ணங்களை உயர்வாக வைக்க வேண்டும். நாம் கடினமாக உழைக்கவில்லை என்றால் யார் உழைப்பார்கள்?” என்றெல்லாம் அப்போது கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டும் என்பதில் எல்லாம் அர்த்தமில்லை. உண்மையில் செயல்திறன் மீதுதான் கவனம் நமக்கு இருக்க வேண்டும். நம் நாட்டில் மோசமான, போதாத உட்கட்டமைப்பு வசதிகளின் ஊடே அன்றாட வாழ்வே சவாலானதாக இருக்கிறது. சமூக ஒழுங்குக்குகும், நல்லிணக்கத்துக்கும் ஒவ்வொருவரின் வேலை - வாழ்க்கை சமநிலை பேணப்படுவது அவசியம் ஆகும். எனவே, இந்தியா வாரத்துக்கு 4 நாட்கள் வேலை முறையைப் பற்றித்தான் பரிசீலிக்க வேண்டும். திங்கள்கிழமை பகல் 12 தொடங்கி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை என்ற வேலை நாட்களை நாம் திட்டமிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இம்செக்யூர் பாராமெசடிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இளம் தொழில் அதிபரும், அந்த நிறுவனத்தின் சிஇஓவுமான நமீதா தாபர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்தால் தான் நாம் வளருவோம் என்ற கருத்து எல்லாம் மிகப்பெரிய பொய் என்று சாடியுள்ளார். பெரிய நிறுவனங்களில் டன் கணக்கில் பணம் ஈட்டும் நிறுவன தலைவர்கள், தலைமை பொறுப்புகளில் இருப்பர்கள் வேண்டுமானால் வாரம் 70 மணி நேரம் வேலை செய்யட்டும். ஏன் கடைசி வரை.. 24 மணி நேரம் கூட வேலை செய்யட்டும்.. ஆனால் அதையே குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று கூறியுள்ளார். . ஊழியர்களை பல மணிநேரம் வேலை செய்ய சொல்வது கடுமையான உடல் மற்றும் மன ஆரோக்கிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் நமீதா தாபர் கூறினார். கடினமாக மணிநேரம் உழைத்தபோது, சாதாரண ஊழியர்களின் சம்பளம் உயராத நிலையில், இதுபோன்று வேலை செய்யுமாறு எதிர்பார்க்கக்கூடாது என்றும் கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post