அதிரடியாக குறைந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?

post-img

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.


சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2.021.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை வெகுவாக குறைந்துள்ளது.

 

இன்றைய நிலவரப்படி, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.84.50 விலை குறைந்து ரூ.1,937 ஆக சிலிண்டர் விலை உள்ளது. இதனால் வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.1,180.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 376-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.

 

அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Related Post