இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்! எலான் மஸ்க் அந்தர் பல்டி..!

post-img

சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான பராக் அகர்வால்-ஐ கிண்டல் செய்யும் விதமாக அவர் வளர்க்கும் நாயை சிஇஓ-வாக நியமித்தார். டிசம்பர் மாதம் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதிவியை எடுக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக யாரையாவது கண்டால், நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன் என டிவீட் செய்தார்.

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதவில் டிவிட்டர் சிஇஓ பதவிக்கு ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும், அவர் ஒரு பெண் என்றும், 6 வாரத்தில் பணியை துவங்க உள்ளார் என்றும் தெரிவித்தார். இதன் பின்பு டிவிட்டர் சிஇஓ பொறுப்புக்களில் இருந்து எலான் மஸ்க் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

                                                                  இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்! எலான் மஸ்க் போட்ட அந்தர் பல்டி..!
ஆனால் டிவிட்டரை விட்டு எலான் மஸ்க் வெளியேறப்போவது இல்லை, டெஸ்லா முதலீட்டாளர்கள் அனைவரும் கேட்டது எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் தினசரி பணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால் எலான் மஸ்க் இதை செய்ய மறுத்துள்ளார், தற்போது சிஇஓ பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார்.

எலான் மஸ்க் தற்போது சிஇஓ பதவியில் இருந்து விலகி, எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பை ஏற்க உள்ளார். இப்பதவியில் இருந்துக்கொண்டு டிவிட்டர் நிறுவனத்தின் ப்ராடெக்ட், சாப்ட்வேர், சிஸ்டம் ஆப்ரேஷன்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

இதன் மூலம் எலான் மஸ்க் டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வாக்குறுதியான, தான் டிவிட்டரில் பணியாற்றும் நேரத்தை குறைக்கப்பதாக கூறியதை மீற உள்ளார். எலான் மஸ்க் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பை ஏற்க முக்கிய காரணமும் உண்டு.   டிவிட்டர் பயணத்தில் மிகவும் முக்கிய கட்டமாக எலான் மஸ்க்-ன் கனவு திட்டமான சூப்பர் ஆப் 'X' உடன் டிவிட்டர் இணைக்கப்பட்டு உள்ளது என சில வாரங்களுக்கு முன் எலான் மஸ்க் தெரிவிட்டார்.

அமெரிக்க நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் டிவிட்டர் என்ற நிறுவனமே தற்போது இல்லை, டிவிட்டர் இன்க், X Corp உடன் இணைக்கப்பட்டு உள்ளது என எலான் மஸ்க் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Post