ஒவ்வொரு குழந்தையின் கல்வி சார்ந்த பயணமும் தனித்துவம் மிக்கது. இந்தப் பயணத்தில் அவர்கள் பல சவால்களை சந்திக்கிறார்கள். இது அவர்களின் படிப்பிலும் உணர்ச்சிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தைகள் பள்ளியில் ஏதாவது சிரமங்களை சந்தித்தால், அதை பெற்றோர்களாகிய நீங்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான செயலூக்கம் நிறைந்த முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகள் பள்ளியில் பல இன்னல்களையும் சிரமங்களையும் சந்தித்து வருகிறார்கள் என்பதை தெரிவிக்கும் 7 அறிகுறிகள் இதோ…
படிப்பில் ஆர்வம் குறைதல் : பள்ளித் தேர்வுகளில் உங்கள் குழந்தையின் ரேங்க் திடீரென்று குறைந்தாலோ அல்லது அவர்களுடைய திறமைகளுக்கு குறைவாக தொடர்ந்து மதிப்பெண் பெற்றாலோ, உங்கள் குழந்தை படிப்பில் சிரமப்படுகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும். போதுமான முன்னேற்றம் இல்லாமல் இருப்பது மற்றும் தொடர்ந்து மதிப்பெண் குறைந்தாலோ அல்லது பாடத்தை புரிந்துகொள்வதில் ஏதாவது சிரமமா என்பதை கண்டுபிடியுங்கள்.
தொடர்ச்சியான புகார்கள் : உங்கள் குழந்தை அடிக்கடி பள்ளியை பற்றி குறை கூறுகிறார்கள் என்றால் அதை காது கொடுத்து கேளுங்கள். பாடங்களை சரியாக புரிந்து கொள்வதில்லை, சக மாணவர்களோடு பழகுவதில் பிரச்சனை இருக்கிறது என புகார்கள் வந்தால், பள்ளியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தொடர்ச்சியான புகார்கள் : உங்கள் குழந்தை அடிக்கடி பள்ளியை பற்றி குறை கூறுகிறார்கள் என்றால் அதை காது கொடுத்து கேளுங்கள். பாடங்களை சரியாக புரிந்து கொள்வதில்லை, சக மாணவர்களோடு பழகுவதில் பிரச்சனை இருக்கிறது என புகார்கள் வந்தால், பள்ளியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
பள்ளிப் கொடுக்கப்படும் வேலைகளை தவிர்ப்பது : வீட்டுப் பாடங்களை முடிப்பதில் அல்லது வீட்டில் அமர்ந்து படிப்பதை அடிக்கடி உங்கள் குழந்தை தவிர்த்தால், அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும். இதன் காரணமாக கொடுத்த வேலைகளை தள்ளிப்போடுதல் அல்லது பள்ளி தொடர்பான பணிகளில் கவனம் செலுத்துவதில் உள்ள சிரமத்தை வெளிப்படுத்துவார்கள்.
உணர்ச்சிகளில் ஏற்படும் மாறுதல்கள் : உங்கள் குழந்தையின் உணர்ச்சிகளில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்பதை கவனியுங்கள். அடிக்கடி எரிச்சலோ, ஏமாற்றமோ, பதட்டமோ அடைந்தாலோ அல்லது தன்னம்பிக்கை குறைந்து காணப்பட்டாலோ, பள்ளியில் பல சிரமங்களை அவர்கள் சந்திக்கிறார்கள் என்று அர்த்தம்.
சமூக விலக்கம் : உங்கள் குழந்தை திடீரென்று யாரிடமும் பேசுவதை, பழகுவதை நிறுத்துகிறார்களா? குழு நடவடிக்கைகளில் பங்கேற்பது, நண்பர்களோடு பழகுவது போன்றவற்றில் சிரமப்படுகிறார்களா? அல்லது, எப்போதும் தனிமையை விரும்புகிறார்களா? அப்படியென்றால், உங்கள் குழந்தை பள்ளியில் ஏதோ சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
நேர மேலாண்மை இல்லாத்து : எதையும் முறையாக செய்வதிலும் நேர மேலாண்மையை கடைபிடிப்பதிலும் மோசமாக இருந்தால், அது உங்கள் குழந்தையின் படிப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டுப் பாட்த்தை மறக்கிறார்களா அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்த வேலையை முடிக்க சிரமப்படுகிறார்களா என்பதை கவனியுங்கள்.