திடீர் மாரடைப்பு.. அதற்கு முன் நெஞ்சு வலி.. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு?

post-img

சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரின் உடல்நிலையில் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.


மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடம் இயங்கி வருகிறது. இந்திய பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார்.


ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்தவர் என்று அழைக்கப்பட்டவர் இவர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார்.ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.


பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் பலர் இவரை தீவிரமாக பின்பற்றி வந்தனர். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு.


மாரடைப்பு: 82 வயதாகும் இவர் இன்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
முக்கியமாக இதயவலி காரணமாக அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இன்றும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. அவருக்கு மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது . இதை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


அஞ்சலி: இவரின் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்துள்ள இரங்கலில், கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக 'அம்மா' என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.


ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் அவர்கள் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

Related Post