அட்ராசக்க! ஐ போன் 15 வாங்குனா ஜியோவில் செம்ம ஆஃபர்.. ஆறு மாசம் கவலையே இல்ல..

post-img

சென்னை: ஆப்பிள் ஐ போன் 15 சமீபத்தில் அறிமுகமாகி, ஐ போன் பிரியர்களின் திரளான ஆதரவைப் பெற்று வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ஒரு பிரத்யேக ஆஃபரை அறிவித்துள்ளது. ஐ போன் 15 வாங்கினால், 6 மாதங்களுக்கு ஜியோவின் செம்ம பிளானை இலவசமாக பெறலாம்.
ஐ போன் 15: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வரிசையில் 'ஐ போன்-15' அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையங்களில் இந்த விற்பனை தொடங்கிய நிலையில், புதிய 'ஐ போன்'-ஐ வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
அகமதாபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் 'ஐ போன்-15'- ஐ வாங்கினார். அவர் அதற்கு முந்தைய நாள் மலை 3 மணி முதல் சுமார் 17 மணி நேரம் அங்கு காத்திருந்து ஐ போன் 15-ஐ வாங்கியுள்ளார். வேலையை விட்டு காத்திருந்து ஐ போன் 15 மாடலை வாங்கும் அளவுக்கு ஐ போன் பிரியர்கள் உள்ளனர். தற்போது ஆப்பிள் ஐ போன் 15, ஆப்பிள் ஷோரும்களிலும் பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஜியோவின் பிரத்யேக ஆஃபர்: இந்நிலையில், ஆப்பிள் ஐ போன் 15-ஐ வாங்கும் ஐ போன் பிரியர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ ஒரு பிரத்யேக ஆஃபரை வழங்கி வருகிறது. இந்த ஆஃபரின் படி, நீங்கள் iPhone 15 வாங்கினால், 6 மாதங்களுக்கு ஜியோ இலவச ரீசார்ஜ் சலுகை வழங்கப்படும். இதன் மூலம் ஜியோ யூசர்கள் ரூ.2,394 சேமிக்கலாம். ஆனால் இந்த டிஸ்கவுன்டை, ஐ போன் 15 புதிதாக வாங்கிய எல்லோரும் அனுபவிக்க முடியாது.
நீங்கள் ஆப்பிள் ஐபோன் 15-ஐ ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் தளத்தில் வாங்கினால், நீங்கள் ஜியோவின் ஸ்பெஷல் சலுகையை அனுபவிக்க முடியும். மேலும், JioMart-லிருந்து iPhone 15 வாங்கினாலும் ஜியோவின் இந்த பிரத்யேக சலுகையைப் பெறலாம். இந்த தளங்களில் ஐபோன் 15 மாடல்களில் எதை வாங்கினாலும், உங்கள் ஜியோ சிம்மில் ஆறு மாதத்திற்கு இந்த ஆஃபரை யூஸ் செய்யலாம்.
6 மாதம் ஃப்ரீ: ஜியோ ஆபரில் iPhone 15 வாங்கினால் 6 மாத இலவச ரீசார்ஜ் கிடைக்கிறது. அதன்படி, மாதத்திற்கு ரூ.399 பிளானை, 6 மாதங்களுக்கு இலவசமாக அனுபவிக்க முடியும். இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியும், தினமும் 100 இலவச SMS சேவையையும் பெற முடியும். ரிலையன்ஸ் ஜியோ மூலம் ஐபோன் 15 ஐ வாங்குவதன் மூலம் மொத்தம் ரூ.2,394 சேமிக்க முடியும்.


இந்த சலுகையை அனுபவிக்க ஜியோ அல்லாத வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க வேண்டும். அல்லது உங்கள் நம்பரை ஜியோவுக்கு போர்ட் செய்யலாம். இந்தச் சலுகை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. புதிய iPhone 15 டிவைசில் ப்ரீபெய்ட் ஜியோ சிம்மைச் செருகிய 72 மணி நேரத்திற்குள் உங்கள் மொபைலில் ஜியோவின் இலவச சலுகை தானாகவே ஆக்டிவேட் ஆகிவிடும்.
இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.ஸ் அல்லது ஈமெயில் மூலமாகவும் தெரிவிக்கப்படும். புதிதாக அறிமுகமாகியுள்ள ஐபோன் 15 போன்களுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் ஆஃபர் செல்லுபடியாகும். புதிய ஐபோன் 15 மாடல் இந்தியாவில் ரூ.79,000 முதல் தொடங்குகிறது. இதனை ரிலையன்ஸ் ஜியோ அவுட்லெட் அல்லது ஜியோ மார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் வாங்கினால் ஜியோவின் இந்த கூடுதல் சலுகையைப் பெறலாம்.

Related Post