ஐபிஎல் தொடரின் முதல் கட்ட போட்டிகளின் போதே சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்திற்கு முதற்கட்ட சிகிச்சைகளை மட்டுமே எடுத்துக் கொண்ட தோனி, காயத்துடனே ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வந்தார். இருப்பினும் தோனி தீவிர சிகிச்சை எதுவும் எடுத்து கொள்ளவில்லை.
இந்தநிலையில் சாம்பியன் பட்டம் வென்ற 2வது நாட்களிலேயே தோனி தனது முழங்காலில் காயத்திற்காக சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்காக மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் தோனி சிகிச்சை பெற உள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்ட விபத்திற்கு பின், இதே மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் ரிஷப் பண்ட்-க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா தோனிக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் தோனி சிறிது காலம் தோனி ஓய்வில் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் தோனி மீண்டும் பழைய வேகத்துடன் ஓடுவதற்கு 2 மாதங்கள் வரை ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்ப்பட்டுள்ளதை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.
நேற்று காலை சிஎஸ்கே கேப்டன் தோனி, மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்திலிருந்து காரில் வந்த தோனி, கறுப்பு நிற டீ சர்ட் அணிந்து பகவத் கீதை புத்தகத்தை கையில் வைத்திருந்தார். இதன்பின்னர் அவர் மருத்துவமனை க்கு சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது. அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன் தோனி, பகவத் கீதையுடன் இருந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.