மட்டன் வாங்கறீங்களா? ஆட்டிறைச்சி செய்தால் இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க..

post-img

சென்னை: மட்டனை பொறுத்தவரை, அதன் ஒவ்வொரு உறுப்புகளும், நம்முடைய ஒவ்வொரு உறுப்புகளுக்கும் நன்மை தரும் என்று சொல்வார்கள்.. அதனால்தான், மட்டனுக்கான மவுசு எப்போதுமே உயர்ந்து காணப்படுகிறது. அந்தவகையில், நுரையீரலின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது.
பளபளப்பு: மற்றபடி, உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.. உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும்..
உடலுக்கு தீங்கு என்று சொல்லியே, சிலர் ஆட்டுக்கறியை ஒதுக்கிவைத்துவிட்டார்கள். ஆட்டுக்கறியைவிட, அதன் உறுப்புகளே சத்துக்கள் நிரம்பியவை.. ஆட்டின் கண்கள், கபம், சளி, இருமல், நீங்கும்.. மார்புக்கு பலத்தை தரக்கூடியது.. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது.. ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையை சாப்பிட்டால், கிட்னியில் உள்ள கசடுகளை நீக்கிவிடும்.
ஆட்டின் தலைக்கறியை சாப்பிட்டால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. ஆட்டின் குடல் செரிமானக் கோளாறுகளை சீர்செய்யக்கூடியது. ஆட்டு கொழுப்புகளை, இடுப்பு பகுதிக்கு நன்மை தரக்கூடியது.
மட்டன் செய்றீங்களா.. ஆட்டுக்கறி எலும்பு எடுத்தால் இப்படி செய்து பாருங்க.. "தலைபாரம்" ஓடியே போயிரும்
ஆட்டு நுரையீரல்கள்: அந்தவகையில், மிக முக்கியமானது ஆட்டின் நுரையீரல் ஆகும். இந்த நுரையீரலில் பெரும்பாலும் தண்ணீர்தான் நிரம்பியிருக்கும்.. ஆனால், கொலஸ்ட்ரால் அந்த அளவுக்கு இல்லை என்கிறார்கள்..
உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்த இந்த நுரையீரல் பெரிதும் உதவுகிறது.. இடுப்பு பகுதிக்கு பெரும் சக்தியை இந்த நுரையீரல்கள் தருகின்றன. அதுமட்டுமல்ல, நம்முடைய நுரையீரலுக்கும் வலுவை தருகிறது.. மூச்சுத்திணறல், ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், இந்த நுரையீரலை சமைத்து சாப்பிடலாம்.
எப்படி சுத்தம் செய்வது: நுரையீரலின் குழாய் பகுதியை, வாஷ்பேசினில் உள்ள தண்ணீர் குழாயில் பொருத்திவிட வேண்டும். இப்போது, குழாயில் வரும் தண்ணீரானது, நுரையீல் குழாய் வழியே உள்ளே வயிற்றுக்குள் இறங்கும்.. சிறிது நேரத்தில் குழாய் நீரானது, அந்த நுரையீரலுக்குள் நுழைந்து உப்பி மேலே எழும்பும். இப்போது, தலைகீழாக நுரையீரலை கவிழ்க்க வேண்டும்.
அழுக்குகள்: இதில், அழுக்குகளுடன், கழிவுகள் அனைத்தும் அந்த நீரில் வெளியேறிவிடும். இப்படி நான்கைந்து முறை, நுரையீரலுக்குள் தண்ணீர் நிரப்பி கழுவி கீழே ஊற்றிவிட வேண்டும். அதற்கு பிறகு, நுரையீரலின் மேலே, மெல்லி சவ்வு போல இருக்கும். அதை கையாலேயே உரித்து வெளியே எடுத்து விட வேண்டும். சிறுசிறு துண்டுகளாக அரிந்து வைத்து கொண்டு, அதற்கு பிறகு மறுபடியும் கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது, ஒரு வாணலில், சிறிது தண்ணீரை ஊற்றி, அரிந்து வைத்துள்ள நுரையீரல், மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.. இப்போது, நுரையீரலிலுள்ள தண்ணீர் எல்லாமே வெளியேற துவங்கும். இறுதியில், இந்த தண்ணீரையும் கீழே ஊற்றிவிட்டு, வெறும் நுரையீரலை மட்டும் சமைக்க பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆஸ்துமா பிரச்சனை: இதை கிரேவி போலவும் செய்யலாம், வறுவல் போலவும் செய்யலாம். சிப்ஸ் போலவும் செய்யலாம். நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள், ஆஸ்துமா, நுரையீரலில் சளி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இதனை மிளகு சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

 

Related Post