அவர் இறக்கவில்லை -நடிகை ஸ்ருதி வெளியிட்ட அவசர வீடியோ.. உண்மை இதுதானாம்

post-img

சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியாவின் கணவர் சில தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்து இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ருதி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தன்னுடைய கணவர் இறப்பு எப்படி ஏற்பட்டது என்று அவர் பற்றிய பல தகவல்களையும் கூறியிருக்கிறார். அதோடு உண்மை இல்லாத விஷயங்களை பரப்பாதீர்கள் என்று வேண்டுகோளும் வைத்திருக்கிறார்.

சன் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரைக்கும் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் ஸ்ருதி சண்முக பிரியா. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தான் அரவிந்த் சேகர் என்பவரோடு திருமணம் முடிவடைந்தது. திருமணத்திற்கு பிறகு எந்த சீரியலிலும் ஸ்ருதி நடிக்கவில்லை.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதியின் கணவர் அரவிந்த் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். அதை தொடர்ந்து இந்த செய்திகள் இணையத்திலும், செய்தி சேனல்களிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு முதல் முறையாக ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அனைவருக்கும் வணக்கம் அரவிந்துடைய இறப்புக்கு நிறைய பேரு நேரில் வந்து ஆறுதல் கொடுத்து சப்போர்ட் ஆக இருந்தீங்க. நிறைய பேரு மெசேஜ் பண்ணி ஆறுதல் கொடுத்துட்டு இருக்கீங்க. அதுக்கு எல்லாத்துக்கும் நன்றி அரவிந்த் எப்பவும் என் கூடவே இருக்காரு. என்ன விட்டுட்டு எப்பவும் போக மாட்டாரு. ஆனாலும் இந்த கஷ்டமான நேரத்திலும் வீட்டில் இருக்கிற மத்த பார்மாலிட்டிஸ் எல்லாத்தையும் விட்டுட்டு இப்படி ஒரு வீடியோ ரெக்கார்ட் பண்ணி போடுவதற்கு மெயின் ரீசன் நிறைய யூடியூப் சேனல்களிலும் செய்தி சேனல்களிலும் தவறான செய்திகள் ஸ்பிரட் பண்ணிட்டு இருக்கீங்க.

அவர் ஒரு சிவில் இன்ஜினியர். அவருக்கு ஃபேஷன் பிட்னஸ் அவ்வளவுதான். இதையே நாங்க தாண்டிக்கிட்டு இருக்கும் இந்த நேரத்துல, அவர பத்தியும் இந்த விஷயத்தை பற்றியோ எந்த ரூமரும் பரப்பாதீங்க. அது ஒன்னு மட்டும் தா உங்ககிட்ட ரெக்வெஸ்ட் பண்ணி கே கேட்கிறேன். ஃபேமிலியை நாங்கதான் ஸ்ட்ராங் படுத்தி கிட்டு இருக்கோம். எல்லாம் வயசானவங்க. அதனால சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்கோங்க, சப்போர்ட் பண்ண உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் என்று கூறி இருக்கிறார்.


Related Post