ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் அவரின் கைதுக்கு பின் இருக்கும் காரணங்கள் முழுமையாக வெளியாகி உள்ளன. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சுக்கு பின்பாக.. அல்லு அர்ஜுன் தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
1. புஷ்பா 2 படம் பார்க்க டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வருவதாக கூறி உள்ளார். போலீஸ் அவரிடம் வர வேண்டாம். கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் நீங்கள் சொல்லுவிட்டு வருகிறீர்கள். அப்படி வந்தால் சிக்கல். ரகசியமாக கூட வாருங்கள் என்று கூறி உள்ளனர்.
2. ஆனால் அதை கேட்காமல் அல்லு அர்ஜுன் பாதுகாப்பு இல்லாமல்.. போலீஸ் எச்சரிக்கையை மீறி அங்கே வந்துள்ளார். அதோடு காரின் மேல் கண்ணாடியை திறந்து அங்கே இருந்த ரசிகர்களுக்கு கை காட்டி உள்ளார். மேலும் மாடி படிகளில் சாதாரணமாக ஏறி சென்றுள்ளார்.
3. இதில் அவரை பார்க்க ரசிகர்கள் பலர் பால் கனி நோக்கி மாடி படியில் வேகமாக ஓடி உள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயது பெண் உயிரிழந்தார். அவரது மைனர் மகன் பலத்த காயம் அடைந்தது மூளை சாவு அடைந்தார்.
4. இது தொடர்பாக சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பொதுமக்களை கட்டுப்படுத்த தியேட்டரில் தெலுங்கானா போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரீமியர் காட்சிக்கு முன்னதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த இடத்திற்கு வந்தபோது, அவரது ரசிகர்கள் வெறித்தனமாகச் அவரை பார்க்க அருகில் சென்றனர்.. இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
5. அதிலும் அர்ஜுன் வெறுமனே படத்தைப் பார்த்து விட்டுச் செல்லவில்லை. அவர் காரின் சன்ரூஃப்பில் இருந்து வெளியே வந்தார், தனது திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடிய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார், வாழ்த்தினார். இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. இந்த கூட்ட நெரிசலில்தான் ரேவதி என்ற பெண் பலியானார். 9 வயதே கொண்ட அவரின் மகன் ஸ்ரீ தேஜா மூச்சு பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் உள்ளார்.
6. நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகை பலியானது தெரிந்தும் கூட.. தொடர்ந்து விடாமல் 3 மணி நேரம் படம் பார்த்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்த்தது வீடியோ மூலம் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
7. பெண் இறந்துவிட்டார் என்று கூறியும் 3 மணி நேரம் படத்தை முடித்து விட்டு சென்ற அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். அவரிடம் தியேட்டரில் இருக்கும் போதே ரசிகை பலியானது பற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடைசியில் பாடல் முடியும் வரை அவர் இருந்துவிட்டு அதன்பின்பே சென்றுள்ளார்.
8. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் படத்தின் இன்டர்வலுக்கு பின் கிஸ்க் பாடலின் போது.. போலீஸ் அவரிடம்.. உங்கள் ரசிகை இறந்துள்ளார். நீங்கள் இனியும் இங்கே இருப்பது சரியாக இருக்காது. உடனே இங்கிருந்து செல்லுங்கள். இல்லையென்றால் உங்களை கைது செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளனர்.
9. ஆனால் அதை மீறி முழுமையாக படம் பார்த்துட்டே படத்திற்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்று அறிந்து கொண்டே அல்லு அர்ஜுன் அங்கிருந்து சென்றுள்ளார்.,
10. அதோடு படத்திற்கு நெகட்டிவ் விஷயங்கள் நடந்து பிரமோஷன் வந்தால் நல்லதே என்றும் அவர் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.