காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு சாலையை நோக்கிச் சென்றதால் அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினர்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ரயில், தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு சாலை நோக்கிச் சென்றது. இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். எனினும், சரக்கு ரயில் பெட்டிகள் தடுப்புச் சுவரை உடைத்தன. தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
சரக்கு ரயில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ரயில்வே கேட் போடப்பட்டிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.