சென்னை: சென்னையில் வசித்து வரும் 8 வயது சிறுவனுக்கு கடுமையான இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்தால் தான் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். சிறுவனின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த பண உதவியை செய்யவும்.
சென்னையை சேர்ந்தவர் செல்லமுத்து. நாடி ஜோசியரான இவரது மகன் விஜய்குமார் (வயது 8). அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற மாணவர்களை போலவே விளையாட்டு, கல்வியில் ஆர்வம் கொண்டவன் சிறுவன் விஜய்குமார். எப்போதும் துருதுருவென இருக்கும் விஜயகுமாருக்கு ஒரு நாள் திடீரென தீவிர இருமல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து அவனது குடும்பத்தினர் விஜய்குமாரை மருத்துவமனைகளில் காண்பித்தனர். ஆனால் பிரச்சினை சரியாகவில்லை. தொடர்ந்து அவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, சிறுவன் விஜய்குமாருக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. TAPVC, AV வால்வு பிரச்சினை மற்றும் PA என சிக்கலான இருதய கோளாறு இருந்தது.
இந்த சிகிச்சைகளை மேற்கொள்ள ரூ.5 லட்சம் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறினர். ஜோசியர் வேலை பார்க்கும் விஜய்குமாரின் தந்தை செல்லமுத்துவால் இவ்வளவு பெரிய தொகையை சேர்ப்பது என்பது மிகவும் சவாலானதாகும். தினமும் 200 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறும் இவரால் இவ்வளவு பெரிய தொகையை புரட்ட முடியாது.
ஏற்கனவே விஜய்குமாரின் தங்கைக்கும் உடல்நிலை சரியில்லை. அவரை பார்த்துக்கொள்ளவே செல்லமுத்துவின் சம்பளம் சரியாக போய்விடுகிறது. மாணவன் விஜய்குமார் உயிர் பிழைக்க இதய சிகிச்சை மேற்கொள்வது கட்டாயம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். மாணவன் விஜய்குமாரின் உயிரை காப்பாற்ற உடனடியாக 5 லட்சம் தேவைப்படுகிறது.
எனவே, உங்களால் முடிந்த சிறு உதவியினை செய்யலாம். சிறுவனின் வாழ்வாதாரத்திற்கான பங்களிப்பாக இந்த உதவி இருக்கும். நீங்கள் அனைவரும் செய்யும் இந்த பங்களிப்பு மாணவன் விஜய்குமாரின் உயிரை காப்பாற்ற உதவும். தங்களால் முடிந்த சிறு உதவியினை கூட செய்யலாம். சிறு உதவியும் அவனது உயிரை காப்பாற்ற உதவும்.