PhonePe மூலம் வருமான வரி ... புதிய சேவை தொடக்கம்.. எப்படி செலுத்துவது?

post-img

போன் பே (PhonePe) நிறுவனம், வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் வருமான வரியை செலுத்தும் வகையில், புதிய அம்சத்தை கொண்டுவந்துள்ளது. இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? இதன் மூலம் வரி செலுத்தினால் எத்தனை நாட்களில் வரவு வைக்கப்படும்? உள்ளிட்ட விவரங்கள் இதோ.

நாம் பயன்படுத்தி வரும் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற டிஜிட்டல் பேமெண்ட் ஆப்கள் மூலம் பெரும்பலான பில்களை கட்டிவிட முடிகிறது. இதில், போன் பே ஆப்பில் மட்டும், போன் பில் தொடங்கி கரண்ட் பில், சிலிண்டர் புக்கிங், வாட்டர் பில், டிடிஎச் பில், பாஸ்ட் டேக் ரீசார்ஜ் என்று பெரும்பாலான பில்களை கட்டிக்கொள்ள முடிகிறது.

அதுமட்டுமல்லால், கிரெடிட் கார்டு பேமெண்ட், லோன் பேமெண்ட், எல்ஐசி இன்ஷூரன்ஸ், வாகன இன்ஷூரன்ஸ், நகராட்சி வரி உள்ளிட்டவைக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற முக்கியமான அம்சங்கள் ஏராளமாக இருந்தும், அதுகுறித்து நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால், இப்போது, ஒரேவொரு புதிய அம்சம் மூலம் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் போன் பே ஈர்த்துள்ளது.

ஆம், போன் பே ஆப் மூலம், இனிமேல் வீட்டில் இருந்தபடியே வருமான வரியை (PhonePay Income Tax Payment) சில நிமிடங்களில் செலுத்திக்கொள்ள முடியும். இந்த சேவைக்கு போன் பே நிறுவனம் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளதால், எந்தவித தயக்கமும் இன்றி மக்கள் வருமான வரி செலுத்திக் கொள்ளலாம்.

போன் பே மூலம் வருமான வரி செலுத்துவது எப்படி?

முதலில் உங்களது, போன் பே ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதையடுத்து ஆப்பை திறந்தால், முகப்பு பக்கத்தில் இருந்து சற்று கீழே நிதி சேவைகள் மற்றும் வரி (Financial Services And Tax) என்னும் டேப் தோன்றும். அதில், வருமான வரி (Income Tax) லோகோ இடம்பெற்றிருக்கும்.

அதை கிளிக் செய்தால், உங்களது பான் கார்டு விவரங்கள் மற்றும் வருமான வரி விவரங்கள் கேட்கப்படும். அதில், வருமான வரி செலுத்த வேண்டிய வருடம், எவ்வளவு வரி கட்ட வேண்டும் உள்ளிட்டவை விவரங்கள் அடங்கும். இதையெல்லாம் கொடுத்து பணத்தை கட்டியப் பின்பு, உங்களுக்கு இமெயில் மூலம் சலான் அனுப்பப்படும். இதையடுத்து 2 வேலை நாட்களுக்குள் அந்தத் தொகை உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.

இப்படி மிகவும் எளிமையாக சில நிமிடங்களில் வருமான வரியை செலுத்தி விடலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Related Post