சென்னையில் கார், பைக் ஓட்டும் நபர்களுக்கு முக்கியமான அறிவுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்கு பாயும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பகலில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. அதேபோல் இரவில் 50 கி.மீ. வேகத்தை கடந்து வாகனம் ஓட்ட கூடாது. மீறி ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
எப்படி இயங்கும் இந்த மிஷன்:
இதற்காக ஆட்டோமெட்டிக் ரேடார் கருவில் சாலை ஓரங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் வாகனங்கள் ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு நகரும் வேகம் கணக்கிடப்படும். அதை வைத்து வாகனங்களின் வேகம் கணக்கிடப்படும். இதை வைத்து 40 கிமீ வேகத்திற்கும் அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கண்காணிப்பு எப்படி: இது போக இப்படி விதிகளை மீறி செல்பவர்களுக்கு அபராதம் அளிப்பதற்காக சாலைகளில் இருக்கும் அனைத்து சந்திப்புகளிலும் இனி கேமரா பொருத்தப்படும். நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் கேமரா பொறுத்தப்படும்.போக்குவரத்து போலீசார் தங்களின் உடலில் கேமரா பொருத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் ரெக்கார்ட் செய்யப்படும்.
போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் இனி கேமரா இருக்கும். இதனால் போலீஸ் சேசிங் அல்லது இரவு நேர ரோந்துகளில் போலீஸ் முக்கிய விஷயங்களை ரெக்கார்ட் செய்ய முடியும்.
இது போக சாலைகளில் வேகமாக வாகனம் செல்லும் போது அதை எளிதாக கண்டுபிடிக்க தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம் கொண்ட சென்சார்கள் சந்திப்புகளில் பொருத்தப்படும்.
அதேபோல் சாலையில் பல்வேறு விதி மீறல் செய்யும் நபர்களை கேமரா மூலம் கண்காணித்து அவர்கள் நம்பர் பிளேட்டை வைத்து தானாக அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த அபராதத்தை போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விதிக்க முடியும். உங்களை அவர்கள் பார்க்கக் வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது நீங்கள் சாலையில் ஹெல்மெட் இன்றி செல்கிறீர்கள். போலீசார் சாலையில் இல்லை என்றால் கேமரா உங்களை பதிவு செய்யும். பின்னர் பைக் நம்பரை வைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சென்னையில் உள்ள இந்த வசதி தமிழ்நாடு முழுக்க கொண்டு வரப்பட உள்ளது. மெயில், போன் மெசேஜ் மூலம் இந்த அபராத செலான் செலுத்தப்படும்.
விதிகள்: ஏற்கனவே தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.
தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.