மும்பை: 'புஷ்பா-2' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நுழைந்த நிஜ போலீசார் புஷ்பான்னா பிளவர் இல்லை.. பயர்..வைல்ட் பயர் என்று ஒரு டயலாக் வரும்.. அது என்னவோ மறுக்க முடியாத உண்மை தான் போல.. புஷ்பா படம் பார்க்க போன புஷ்பாவில் இருந்து போலீஸ்கார் மற்றும் கடைசியில் பெரிய டான் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தியேட்டரில் 'புஷ்பா-2' படம் பார்த்த பெரிய டானுக்கே ஆப்பு தேடி வந்துள்ளது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா-2' திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்த திரைப்படம் என்னதான் வசூலைவாரிக் குவித்தாலும், சர்ச்சைகளில் சிக்காமல் இல்லை.. அந்த படத்தில் இடம் பெற்ற பாடல் தொடங்கி சிறப்பு காட்சி வரை சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஹைதரபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு காட்சிக்கு சென்ற அல்லு அர்ஜூன், அங்கு ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் இறந்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியே அல்லு அர்ஜுனை விமர்சித்து சட்டசபையில் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா-2' திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சம்பவம் நடந்த அன்று ரசிகர்கள் அந்த தியேட்டரில் இரவு காட்சி பார்த்து கொண்டு இருந்தனர். கிளைமாக்ஸ் காட்சியின் போது திடீரென தியேட்டருக்குள் நிஜ போலீசார் புகுந்தனர். தன்னை மறந்து படத்தை பார்த்து கொண்டு இருந்த ஒருவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
இதையடுத்து நடந்த விசாரணையில், கடத்தல் படத்தை பார்க்க சென்ற போது நிஜ கடத்தல்காரன் போலீசில் சிக்கியது தெரியவந்தது. 'புஷ்பா-2' படம் பார்த்து கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்டவர் கொலை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 10 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டு வரும் நாக்பூரை சேர்ந்த விஷால் மேஷ்ராம் என்பதும் போலீஸ் வெளியிட்ட தகவலில் தெரியவந்தது.
நாக்பூரில் பெரிய போதைப்பொருள் கடத்தல்காரனாக அறியப்படும் விஷால் மேஷ்ராம் மீது 2 கொலை வழக்கு, போதைப்பொருள் கடத்தல் உள்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை கடந்த 10 மாதங்களாக நாக்பூர் போலீசார் தேடிவந்துள்ளது. இந்தநிலையில் 'புஷ்பா-2' படம் பார்க்க அவர் நாக்பூரில் உள்ள தியேட்டருக்கு வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பவத்தன்று இரவு போலீசாா் தியேட்டருக்கு சென்றுள்ளார்கள்.
எனினும் இதற்கு முன் போலீசார் பிடிக்க சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு விஷால் தப்பிஓடியிருக்கிறார். இதனால் இந்த முறை உஷாரான போலீசார் வெளியில் நின்ற விஷால் மேஷ்ராமின் கார் டயர்களை முதலில் பஞ்சராக்கியுள்ளார்கள் பின்னர் தியேட்டருக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் படத்தை மெய் மறந்து பார்த்து கொண்டு இருந்த கடத்தல்காரன் விஷால் மேஷ்ராமை சுற்றி வளைத்து கைது செய்துள்ளார்கள்.
முன்னதாக புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்றதாக நெல்லையில் உதவி ஆணையர் சென்றதாக கமிஷனரே கடிந்து கொண்ட சம்பவம் கடந்த இரண்டு வாரம் முன்பு பேசுபொருளாக இருந்தத. ஜீப்பில் காவலுக்கு டிரைவரை அமர்த்திவிட்டு போனதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கமிஷனர் மூர்த்தி, மைக்கில் வந்து உதவி கமிஷனரை கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.