எல்லாமே தப்பா இருக்கு..விஜயை தவறா வழிநடத்துறாங்க! தவெக கொடியை வீசிவிட்டு குமுறிய தொண்டர்! என்னாச்சு?

post-img

சென்னை: சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆதரவாளர் என ஒருவர், விஜயை தவறாக வழிநடத்துவதாகக் கூறி ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய வருமான அண்ணல் அம்பேத்கரின் குறித்த தகவல்கள் இடம்பெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் விகடன் விகடன் குழும நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தகத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய விஜய்," அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் இந்த நாளில் நான் கலந்து கொள்வதை பெரும் வரமாக கருதுகிறேன். மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் கலந்து கொண்டிருக்கும் மேடையில் நான் பங்கேற்று இருப்பதும் பெருமையாக இருக்கிறது." என்றார்.
மேலும் ஆளும் மத்திய மாநில அரசுகளையும் விமர்சிக்க தயங்கவில்லை. மணிப்பூரில் கொடுமைகள் நடக்கும் நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் ஒரு அரசு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் அரசு வேங்கை வயல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் அம்பேத்கர் கோபப்படுவார். இங்கே சம்பிரதாயத்திற்காக அரசியல் நடக்கிறது என கூறினார்.

அதோடு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அவர்களால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் அழுத்தம் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன்.. அவருடைய மனது முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்" என கூறியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது.
விஜயின் பேச்சு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் பதிலளித்து வருகின்றனர். நாளை முதல் அதிமுக திமுகவினர் இது தொடர்பாக நிச்சயம் பேசுபவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இது ஒரு புறம் இருக்க விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோதே அவரது ஆதரவாளர் ஒருவர் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை வீசிவிட்டு கோபத்தோடு பேட்டி கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. "விஜயை தவறாக வழி நடத்துகிறார்கள். அரசியல் செய்யாமல் அந்த நிகழ்ச்சியில் மதப் பிரச்சாரம் செய்வது போல புத்தம் சரணம் கச்சாமி என்கிறார்கள். மக்களை பிரிக்க நினைக்கிறார்கள். இது புத்தக வெளியீட்டு விழா அல்ல.. மதப் பிரச்சாரம் போல் இருக்கிறது.

ஒன்றரை லட்சம் மக்களை இலங்கையில் கொன்று குவித்த புத்த மதத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். நான் எதுவும் பேச விரும்பவில்லை. என் பெயரையும் சொல்ல மாட்டேன். எனக்கு யார் பாதுகாப்பு தருவார்கள்.. மயக்கமாக வருகிறது. என்னை விட்டு விடுங்கள் என பதற்றத்துடன் பேசியவாறு அவர் அங்கிருந்து கிளம்பினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Post