அரசியல் சட்டம் தொடர்பான விவாதம்.. லோக்சபாவில் 14 -ம் தேதி பதிலளித்து பேசுகிறார் பிரதமர் மோடி

post-img

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அரசியல் அமைப்பு தொடர்பான விவாதம் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி சனிக்கிழமை பதிலுரை ஆற்றி பேசுகிறார். ராஜ்யசபாவில் நடைபெறும் விவாதத்திற்கு அமித்ஷா பதிலுரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அதானி உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை ஏற்று லோக்சபாவில் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளிலும், ராஜ்யசபாவில் 16 மற்றும் 17 ஆம் தேதிகளிலும் விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் கூறினார்.
இந்த நிலையில், அரசியல் அமைப்பு குறித்த விவாதத்திற்கு வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி பதலளித்து பேச உள்ளார். ராஜ்யசபாவில் நடைபெறும் விவாதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அவை தொடங்கியதில் இருந்தே தொடர் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

Related Post