சென்னை: செப்டம்பர் 9இல் டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். டெல்லி பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதில் கலந்து கொள்ள உள்ளார்.
2023 G20 உச்சிமாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் (ICapanvent International Exhibition) நடைபெற உள்ளது. இது G20 (Group of Twenty) உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு இதுவாகும்.
ஜி20 புது தில்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த ஜி 20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
பாரத மண்டலம்.. ஜி20 மாநாடு மண்டபத்தில் நடராஜர் சிலை - பிரதமர் மோடி பெருமிதம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்திய தலைநகரில் நடைபெறும் உச்சிமாநாட்டைத் தவிர்க்க முடிவு செய்தனர். அமெரிக்க அதிபர் பிடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வர இருக்கிறார்.
இந்தியாவில் நடக்க உள்ள G20 மாநாட்டில் பின்வரும் ஆறு நிகழ்ச்சி நிரல்கள் செய்யப்பட உள்ளன.
பசுமை வளர்ச்சி, காலநிலை நிதி & வாழ்க்கை
துரிதப்படுத்தப்பட்ட, உள்ளடக்கிய & மீள்திறன் வளர்ச்சி
SDG களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது.
தொழில்நுட்ப மாற்றம் & டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு
21 ஆம் நூற்றாண்டிற்கான நிறுவனங்கள் உட்கட்டமைப்பு
பெண்கள் வளர்ச்சி
G20 இல் ஆப்பிரிக்க ஒன்றியம் இதில் சேர்க்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. டெல்லி G20 உச்சி மாநாட்டில் இதை பற்றி முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்டாலின் டெல்லி பயணம்: இந்த நிலையில்தான் ஜி 20 மாநாட்டை பொறுத்து செப்டம்பர் 9இல் டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். டெல்லி பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார். செப்.9, 10இல் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக சர்வதேச தலைவர்கள் பலர் டெல்லிக்கு வர உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்தர பிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கே சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் டெல்லியில் மொத்தமாக பாதுகாப்பு மாற்றப்பட்டு உள்ளது. நகரத்திற்கு உள்ளே பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.