கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொலலை கொடுத்ததாக கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர் விஜயகுமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளராக இருப்பவர் விஜயகுமார். அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெண் காவலர். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தான் விஜயகுமார், அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
விஜயகுமாரை, அந்த பெண் போலீஸ் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் கூட விஜயகுமார் தனது நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர் விஜயகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage