பண்டிகையை கொண்டாடுங்க! கம்மி ரேட்.. வந்தாச்சு பொங்கல் சிறப்பு தொகுப்புகள்! இன்று முதல் வாங்கலாம்!

post-img
சென்னை: கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படவுள்ளன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கி விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்துள்ளார். அடுத்த மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. அவற்றை நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், சுயசேவை பிரிவுகள், நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் ரூ.199-க்கு 'இனிப்பு பொங்கல் தொகுப்பு' (8 பொருட்கள்), ரூ.499-க்கு 'சிறப்பு கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' (20 பொருட்கள்), ரூ.999-க்கு 'பெரும் பொங்கல் தொகுப்பு' (35 பொருட்கள்) ஆகிய 3 வகைகளில் பொங்கல் தொகுப்புகள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ₹199 இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது இனிப்பு பொங்கல் தொகுப்பாகவும், ₹499 கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு: மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் ஆகிய 19 பொருட்கள் கொண்டது கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பாகும் பிரிக்கப்பட்டுள்ளதும்.. மேலும், ₹999 பெரும் பொங்கல் தொகுப்பு: மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்டதாகும் உள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு இதுபோன்ற சிறப்பு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கூட்டுறவு பண்டக சாலைகள், நியாய விலை கடைகளில் விற்கப்பட்டது. அதில் பொருட்கள் விலை மலிவாகவும் தரமானதாகவும் இருந்ததால் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதை அடுத்து கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்கப்பட்டு வரும் நிலையில் அதன் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சிறப்பு அங்காடியில் அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர்," பொது மக்களுக்கு குறைந்த விற்பனையில் குறைந்த விலையில் தரமான பொருட்களை தரும் பொருட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று வகையான சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த கூட்டுறவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

Related Post