மாத சம்பளதாரருக்கு வந்தது "சிக்கல்".. அதைவிடுங்க, படிவம் 10 B தாக்கலில் வருமான வரி!

post-img

சென்னை: வருமான வரியை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வரும்நிலையில், அடுத்த அதிரடியை தற்போது கையில் எடுத்துள்ளது. வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.


வருமான வரி: இதற்கு பின்பற்ற வேண்டிய தேவையான நடைமுறைகளை வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.. குறிப்பாக வரிக்கு உட்பட்ட வருமானம் விலக்குகள் மற்றும் விலக்குகள் மூலம் குறைக்கப்படும்போது பலர் வரிக்கணக்கை தாக்கல் செய்வதில்லை. அதனால்தான், வருமானவரியை தவறாமல் அனைவரும் செலுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.. ஆனாலும்கூட வரிஏய்ப்பு ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது.. குறிப்பாக, மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்ப்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது.


மாத சம்பளதாரர்கள்: அதனால்தான், மத்திய அரசு இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.. அதன்படி, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித்துறை புதிய சாப்ட்வேரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது.. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரிஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப போவதாக சொல்லியிருந்தனர்.


அடுத்த சில நாட்களிலேயே கணக்கில் காட்டப்படாத ரூ.5,200 கோடி வருமானத்தை அதிகாரிகள் கண்டறிந்ததுடன், வருமான வரி கணக்கு தாக்கலில் முரண்பாடு உள்ளவர்களுக்கு வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பி வருகிறது.. அந்தவகையில், சுமார் 22,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தவிர, வரி கணக்கில் முரண்பாடு உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் வருகிறது.

 

அடுத்த அறிவிப்பு: இந்நிலையில், இன்னொரு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதன்படி, 2022-23 நிதியாண்டிற்கான நிதி தணிக்கை அறிக்கை மற்றும் 2023-24 ஆண்டிற்கான நிதி மதிப்பீட்டு அறிக்கையினை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சகம் செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.. அதில், 2022-23 நிதி ஆண்டிற்கான தணிக்கை அறிக்கைகளை படிவம் 10B/படிவம் 10பிபி யில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இந்த மாதம் 30ம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.. ஆனால், மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (சிபிடிடி) 31-10-2023 வரை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.


காலக்கெடு நீட்டிப்பு: 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கையை ஐடிஆர்-7 படிவத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31-10-2023ல் இருந்து 30-11-2023 ஆகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 225/177/2023/ITA-II-ல் 16/2023ம் எண் கொண்ட சிபிடிடி சுற்றறிக்கையில் இது வெளியிடப்பட்டிருக்கிறது.. மேலும் விபரங்களுக்கு இந்த சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post