அந்தரத்தில் 8 முறை சுற்றிய கார்.. பயங்கரமான விபத்து.. தள்ளாடியபடியே வந்து டீ கேட்ட இளைஞர்கள்!

post-img
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பயங்கரமான விபத்தில், கார் அந்திரத்திலேயே எட்டு முறை சுழன்று அதன் பிறகு கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இந்த விபத்திற்குப் பிறகு மெல்லத் தள்ளாடியபடி எழுந்த அவர்கள், அருகே இருந்தவர்களிடம் டீ கேட்ட சம்பவம் நடந்துள்ளது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாம் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்கிறோம். அதேநேரம் சில விபத்துகளில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படாது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. கார் விபத்து: ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப் பயங்கரமான கார் விபத்து ஒன்று அரங்கேறியது. இந்த விபத்தில் கார் சுமார் 8 முறை அப்படியே அந்திரத்தில் சுற்றி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உள்ளே இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கு இருந்த கார் ஷோரூமில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதில் எஸ்யூவி கார் ஒன்று ஐந்து பேருடன் வேகமாக நெடுஞ்சாலையில் செல்வது பதிவாகியிருக்கிறது. 8 முறை சுத்திய கார்: காரின் டிரைவைர் திருப்பம் ஒன்றில் திருப்ப முயன்ற போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழக்கிறது. கார் அதிவேகமாகச் சென்று கொண்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில், கார் 8 முறை அந்திரத்தில் சுழன்று, அப்படி தலைகீழாகச் சாலையில் விழுந்துள்ளது. அது அந்த காரின் ஷோரூமின் கேட்டில் மோதியதில் அதன் பிரதான கேட் கூட உடைந்துவிட்டது. அந்தளவுக்கு கார் விபத்து மோசமானதாக இருந்தது. மேலும், காரும் சிதைந்து நொறுங்கியது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. கார் அந்திரத்தில் இருந்த போதே டிரைவர் வெளியே குத்தித்துவிட்டராம். மற்றவர்கள் கார் கேட்டின் மீது கவிழ்ந்த மோதிய பிறகு, எப்படியோ மெல்லச் சமாளித்து வெளியே வந்துவிட்டனர். விபத்து காரணமாக காரில் சிறியளவில் தீ பற்றியது. நல்வாய்ப்பாக அந்த தீ கார் முழுக்க பரவவில்லை. அவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படாமல் போக இதுவும் ஒரு காரணமாகும். டீ கேட்ட இளைஞர்கள்: அதன் பிறகு நடந்த சம்பவம் தான் பலருக்கும் வியப்பை அளிப்பதாக இருந்துள்ளது. அதாவது விபத்திற்குப் பிறகு, தள்ளாடியபடியே வெளியே வந்த அந்த இளைஞர்கள், "தயவுசெய்து கொஞ்சம் டீ இருந்தால் கொடுங்களேன்" என்று கேட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "முதலில் டிரைவர் விபத்து சமயத்திலேயே வெளியே குதித்துவிட்டார். பின்னர் உள்ளே இருந்த பயணிகளும் வெளியே வந்துவிட்டனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிறிய காயம் கூட யாருக்கும் ஏற்படவில்லை. விபத்தில் இருந்து எஸ்கேப் ஆனவுடனேயே அவர்கள் சென்று டீ கேட்டுள்ளனர்" என்றார். அவர்கள் நாகௌர் என்ற ஊரில் இருந்து பிகானேர் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Post