இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இத்துறைக்கு முக்கிய தேவையான செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்தியாவில் இல்லாத காரணத்தால் இத்துறை வேகமாக வளர்ச்சி அடைய முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் சிப் தயாரிப்பு மற்றும் டெஸ்டிங்-கிற்கு வெளிநாடுகளை தான் நம்பியுள்ளது.
இந்த நிலையை மாற்ற மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் வேளையில், அமெரிக்காவின் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனமான மைக்ரான் இந்தியாவில் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான 4 அசம்பிளி லைன் கொண்ட செமிகண்டக்டர் சிப் சம்பிளி மற்றும் டெஸ்டிங் தளத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
அமெரிக்காவின் Idaho பகுதியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Micron நிறுவனம் முதல் கட்டமாக 2.5 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளதாகவும், மீதுமுள்ள முதலீட்டை அடுத்த 5 வருடத்தில் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் வெற்றியாகும் பட்சத்தில் மத்திய அரசு OSAT வர்த்தகத்தில் கையெழுத்திடும் முதல் செமிகண்டக்டர் துறை ஒப்பந்தமாக இருக்கும். மத்திய அரசு இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் மற்றும் அதை சார்ந்த வர்த்தகம், உற்பத்தி, சேவை மேம்படுத்துவதற்காக சுமார் 76000 கோடி ரூபாய் மதிப்பிலான மானிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் இதற்கு முன்பு பாக்ஸ்கான் - வேதாந்தா கூட்டணியில் சிப் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கவும், டாடா குழுமம் outsourced semiconductor assembly மற்றும் test தொழிற்சாலையை அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தது.
இதில் அனில் அகர்வாலின் கூட்டணிக்கு மத்திய அரசு மானியம் அளிக்க முடியாது என திட்டவிட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படும் வேளையிஸ், டாடா குழுமம் தனது OSAT தொழிற்சாலைக்கான இடத்தை ஓசூர் மற்றும் கோயம்புத்தூரில் இடத்தை தேடி வருகிறது.
இதனால் டாடா விரைவில் OSAT பிஸ்னஸ்-ஐ துவங்க உள்ள நிலையில், இதே துறையில் அமெரிக்காவின் மைக்ரான் வந்துள்ளது டாடா குழுமத்திற்கு கடுமையான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் துறையில் பொதுவாக ஒரு டெஸ்டிங் தளத்தை அமைக்க 5 பில்லியன் டாலர் அளவிலான தொகை தேவைப்படும், 5 பில்லியன் டாலர் எனில் கிட்டத்தட்ட 40000 கோடி ரூபாய்.
இதுவே செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலை எனில் 10 முதல் 15 பில்லியன் டாலர் தேவைப்படும். அதாவது 80000 முதஸ் 120000 கோடி ரூபாய் வரையில் தேவைப்படும்.