சிவப்பு நிற டீசர்ட்டில் மாரிமுத்து தூங்குவது போல் இருக்கிறதே.. ரசிகர்கள் கண்ணீர்

post-img

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டி வந்த நடிகர் மாரிமுத்துவுக்கு இன்று ஷூட்டிங் இல்லை. அதனால் அவர் ஸ்டூடியோவுக்கு சென்றுவிட்டு டப்பிங் பேசிவிட்டு வீடு திரும்பினார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஹரிபிரியா, கதிர் கேரக்டரில் நடித்த நடிகர், கரிகாலன் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி தெலுத்தி வருகிறார்கள். அவரது உடல் வந்ததும் அவருடைய மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது.

அவரது உடலை ஐஸ் பெட்டியில் வைத்த போது சிவப்பு , சாம்பல் நிற டீசர்ட், கருப்பு நிற பேன்ட் அணிந்திருக்கிறார். ஏதோ படுத்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. அவர் இறந்தது போல் தெரியவில்லை என ரசிகர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள். இந்த காட்சி எதிர்நீச்சலில் ஒரு சீனாக இருக்கக் கூடாதா என கேட்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவரது முகத்தில் இறந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லாமல் அப்படியே படுத்திருப்பது போல் இருக்கிறது. ஆதி குணசேகரனாக மிரட்டினாலும் அவரது உச்சகட்ட நடிப்பின் மூலம் ரசிகர்கள் தனக்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு கட்டி போட்டார். இதுவரை சின்னத்திரையில் வில்லனுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருந்திருக்குமா என தெரியவில்லை. அண்மையில் ஜெயிலர் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

அதில் அவர் தஞ்சாவூர் ஜில்லாகாரி என பாடும் போது தியேட்டரே சிரிப்பலையில் அதிர்ந்தது. இந்தியன் 2 படத்திலும் நடித்து வந்தார். சூட்டிங் ஸ்பாட்டில் கலகலவென அனைவரிடமும் காமெடியாக பேசி மகிழ்வாராம். தற்போதுதான் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் இவர் இறந்துவிட்டாரே என திரைப்பிரபலங்களும் இவருடைய வளர்ச்சியை பார்த்தவர்களும் தெரிவிக்கிறார்கள்.

Related Post