வெளியானது ஐபோன் 15 மாடல்கள்.. இந்தியாவில் அதன் விலை என்ன ? முக்கிய தகவல்

post-img

வாஷிங்டன்: அமெரிக்கா இன்றைய தினம் புதிதாக ஐபோன்களை வெளியிடும் நிலையில், அதன் விலை இந்தியாவில் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப், மாதம் புதிய மொபைல் மாடல்களை வெளியிடும் அதன்படி இன்றைய தினம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது.


இதற்காக அவர்கள் இன்று Apple Wonderlust என்ற நிகழ்வை நடத்துகிறார்கள். இந்த மொபைல் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு வெளியானது.


ஐபோன்: இந்த ஐபோன் 15இல் வரும் முக்கிய அம்சங்கள் குறித்துக் கடந்த பல மாதங்களாகவே இணையத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்தப் புதிய மாடல்களில் குறிப்பிடத் தகுந்த அப்கிரேட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் முதல்முறையாக டைப் சி சார்ஜிங் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோனுக்கு எப்போதும் பிரத்தியேக சார்ஜிங் இருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவால் அதை நீக்கிவிட்டு டைப் சி வசதியைக் கொண்டு வந்துள்ளனர்.


மொபைல் வசதிகளுக்கு இணையாக ஐபோன்களின் விலை குறித்தும் இணையத்தில் எப்போதுமே விவாதம் இருக்கும். இதன் விலை என்னவாக இருக்கும் என்பதற்கு முன்பு இதில் வெளியாக உள்ள மற்ற சாதனங்கள் குறித்து சின்னதாகப் பார்க்கலாம். இந்த நிகழ்வில் ஐபோன்களுடன் சேர்ந்து புது ஆப்பிள் வாட்ச்கள் வெளியாக உள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்டிரா 2 ஆகிய மாடல்கள் வெளியாகியுள்ளது.
விலை என்னவாக இருக்கும்: இதில் அனைத்தையும் விட ஐபோன்கள் மீதே அனைவரது எதிர்பார்ப்பும் இருக்கும். கடந்த ஆண்டுகளைப் போலவே ஐபோன் 15 நான்கு மாடல்களைக் கொண்டிருக்கும். கடந்த காலங்களை வைத்துப் பார்க்கும் போது.. இதில் வழக்கமான ஐபோன் 15இன் விலை இந்தியாவில் ரூ.79,900ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை கணிசமாக உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


பொதுவாக அமெரிக்காவின் விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவில் அதன் விலை அதிகமாகவே இருக்கும்.. இங்கே இந்திய சந்தையில் இருக்கும் சூழல், இறக்குமதி வரி ஆகியவை இதற்குக் காரணமாகும். உதாரணத்திற்குக் கடந்தாண்டு ஐபோன் 14 ப்ரோ அமெரிக்காவில் 999 டாலருக்கு விற்பனைக்கு வந்தது. அப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுமார் 80 ஆயிரம் என்ற ரேஞ்சில் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், இந்தியாவில் இதன் விலை ரூ. 1,29,900ஆக இருந்தது.


மேக்ஸ் மாடல்கள்: இந்தாண்டு மேக்ஸ் மாடல்கள் விலை விலை அமெரிக்காவிலேயே 100 முதல் 200 டாலர் வரை அதிகரிக்கலாம். அதன்படி அங்கே அது 1099 டாலராக இருக்கும். இந்தியச் சந்தையில் அது ரூ. 1,39,900க்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் கடந்தாண்டு அமெரிக்காவில் 1099க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அதன் விலை 1,299 டாலராக இருக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவில் இதன் விலை 1,59,900 ரூபாயாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் கடந்தாண்டு ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை ரூ. 1,39,900ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Post