மதுரை: தமிழ்நாடு முழுக்க நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், மதுரை மேல மாசி வீதியில் இந்து மகா சபா சார்பில் இன்று மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
இந்துக்களின் முழுமுதற்கடவுளாக அறியப்படும் விநாயகரை வழிபடும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நாளில் பொதுமக்கள் விநாயகரை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்தனர் மேலும், நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் விநாயகர் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த வாரம் வரை ரூ.500க்கு விற்பனையான விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ 1000 ரூபாய் வரை சென்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாடு முழுக்க கோளகமாகக் கொண்டாடப்படும்.. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும். சிறிதும் பெரிதுமாக நாடு முழுக்க பல இடங்களில் இந்த விநாயகர் சிலைகள் வைக்கப்படும். அதன்படி இந்தாண்டும் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, அவற்றுக்குச் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் போது அதற்கு சில நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி முடிந்துள்ள நிலையில், பூஜைகள் முடிந்து விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இதிலும் களிமண் உட்பட மக்கும் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதுரையில் இந்து மகா சபா சார்பில் இன்று மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. மேல மாசி வீதியில் நடைபெற்ற இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நகர் முழுக்க பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.