சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு பகிரங்கமாக முயற்சி எடுக்க தொடங்கி உள்ளது. இதற்கான சட்டம் இன்று மசோதாவாக தாக்கல் செய்யப்பட உள்ளது. அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
அங்கே பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மசோதாவை ஆதரித்து வாக்களிக்கும் பட்சத்தில் மாநிலங்களவைக்கு மசோதா செல்லும். இதற்காக பாஜக கட்சியின் எல்லா எம்பிக்களும் கண்டிப்பாக அவைக்கு வர வேண்டும் என்று அவை கொறடா சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த சட்டம் காரணமாக தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களும், 2வது கட்டமாக உள்ளாட்சி , நகராட்சி தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டம் நடந்து முடிந்து 100 நாட்களுக்குள் இரண்டாவது கட்ட தேர்தல் நடத்தப்படும்.
தேர்தல் செலவுகள் இதன் மூலம் குறையும். அதேபோல் தேவையில்லாத பிரச்சார செலவுகளும் இதன் மூலம் குறையும். கடந்த மார்ச் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த தேர்தல் முறை கொண்டு வரப்பட உள்ளதாக அரசு தரப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆட்சி கவிழுமா?:
1. இந்த முறை மசோதாவாக கொண்டு வரப்பட்டு.. சட்டமாக மாறினால்.. மாநில தேர்தல்களோடு சேர்த்து ஒரே நேரத்தில் லோக்சபா தேர்தல் நடத்தப்படும். இதற்காக லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம். அதாவது 2026ல் மத்திய அரசு ஆட்சியை கவிழ்த்துவிட்டு.. 2026ல் ஏற்கனவே நடக்க உள்ள பல மாநில தேர்தல்களோடு நடத்தலாம். தற்போது பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லாததால் பாஜக அதை செய்ய நினைக்கும். இது அரசுக்கு எதிரான மனநிலையை குறைக்கும்.
2. இல்லையென்றால் 2029 லோக்சபா தேர்தல் வரை பல மாநிலங்களில் ஆட்சி காலத்தை நீடிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
3. உதாரணமாக 2026ல் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற பல மாநில தேர்தல்கள் நடக்கும். இந்த தேர்தலோடு சேர்த்து லோக்சபா தேர்தலை நடத்தலாம். 2026ல் மத்திய அரசு ஆட்சியை கவிழ்த்துவிட்டு.. 2026ல் ஏற்கனவே நடக்க உள்ள பல மாநில தேர்தல்களோடு நடத்தலாம். அப்படி செய்ய வேண்டும் என்றால் சமீபத்தில் பதவி ஏற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க வேண்டி இருக்கும்.
4. இல்லையென்றால் 2026ல் பதவி காலம் முடிய வேண்டிய தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியை 2029 வரை நீடிக்க சொல்லலாம். இப்படி செய்து எல்லா மாநிலங்களுக்கு 2029ல் லோக்சபா தேர்தல் நடத்தலாம்.
5. இல்லையென்றால் சட்டம் நிறைவேறியவுடன்.. அடுத்த வருடமே மொத்தமாக நாடு முழுக்க ஆட்சியை கவிழ்த்துவிட்டு 2025ல் கூட மொத்தமாக தேர்தலை நடத்தலாம். இப்போது பாஜக மைனாரிட்டி ஆட்சி என்பதால் ஆட்சியை கவிழ்த்துவிட்டு.. முழு மெஜாரிட்டி பெற தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் கூட உள்ளன. அதாவது எல்லா மாநிலங்களிலும் ஆட்சியை கலைக்கலாம்.. ஆனால் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சமீபத்தில்தான் தேர்தல் நடந்ததால் அப்படி நடக்குமா என்பது சந்தேகம்.
6. இதில் பீகார்: நவம்பர் 2025,
அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்: மே 2026
புதுச்சேரி: ஜூன் 2026
கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்: மார்ச் 2027
உத்திரப் பிரதேசம்: மே 2027
குஜராத், இமாச்சல பிரதேசம்: டிசம்பர் 2027
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா: மார்ச் 2028
கர்நாடகா: மே 2028ல் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதை எல்லாம் சேர்த்து ஒன்றாக தேர்தல் நடத்த வேண்டும்.
7. இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தல் + லோக்சபா தேர்தல் இதுதான் பாஜகவின் நோக்கம் என்று கூறப்படுகிறது. தேசிய அளவில் நிலவும் அலையை பயன்படுத்தி மாநில தேர்தல்களை வெல்லலாம், மாநில கட்சிகளை கட்டுப்படுத்தலாம் என்ற திட்டம் இருப்பதாக தெரிகிறது.
8. தேசிய அளவில் மோடிக்கு பெரிய ஆதரவு உள்ள நிலையில் மாநில தேர்தல்களை சேர்த்து நடத்தினாலும், மாநிலங்களிலும் பாஜக வெல்லும் என்று பாஜக தரப்பு கருதுகிறது. லோக்சபா தேர்தலில் ஓட்டு போடும் மக்கள் சட்டசபை தேர்தலிலும் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று பாஜக கருதுகிறது. இதுவே இந்த திட்டத்திற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
10. இந்த சட்டத்தை சிக்கலின்றி கொண்டு மத்திய அரசு ஏற்கனவே குழுவையும் கூட அமைத்து இருந்தது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.