கங்குவா பார்ட் 2 இல் உங்க எல்லோருக்கும் பதில் இருக்கு.. நடிகர் நடராஜன் நச்

post-img
கோவை: கங்குவா ஒரு நல்ல படம். சில நேரங்களில் அது ஆடியன்ஸ்க்கு போய் சேரும். தற்போது அது சேரவில்லை. கண்டிப்பாக இரண்டாம் பாகம் வந்தால் புரிவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மொத்தமாக பார்த்தால் தான் அது தெரியும். அதைப் பார்க்காமல் முதல் பாகத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வருவது சரியல்ல என்று நடிகர் நடராஜன் பேசியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் 45 ஆவது படத்தின் சூட்டிங்குக்காக கோவை மாவட்டத்துக்கு வந்திருந்த பிரபல ஒளிப்பதிவாளரும், திரைப்பட நடிகருமான நடராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், படம் குறித்த விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மக்கள் காசு கொடுத்து படம் பார்க்கிறார்கள். அதில் உள்ள நிறை குறைகளை அவர்கள் சொல்வார்கள். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். அல்லு அர்ஜுன் விவகாரம் குறித்தான கேள்விக்கு, அது அவருடைய பிரச்சனை. இதில் என்ன நடந்தது என்று தெளிவாக தெரியாது. அந்தப் பெண் அங்கு வந்தபோது இறந்தாரா. அதன் பிறகு இறந்தாரா என்ன நடந்தது என்று தெரியாது என்று பதில் அளித்தார். தொடர்ந்து, ஓடிடி தளத்தில் என்ன பிரச்சனை இருக்கின்றது?. அது பரிணாம வளர்ச்சி. அதனால் நாம் தற்போது ஃபோனில் படம் பார்க்கும் அளவிற்கு வந்து விட்டோம்.. விருச்சுவல் ரியாலிட்டியாக படம் பார்க்கும் அளவிற்கு வந்து விடுவோம். இது வளர்ந்து கொண்டே தான் இருக்கும். ஒரு காலத்தில் 50 லட்சம் ரூபாயில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது 120 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். மல்டிஃபிளக்ஸ் என்பது வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அதை மாற்ற முடியாது. மக்களும் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். நல்ல படங்களுக்கு வரவேற்பும் கிடைக்கும். Ai தொழில்நுட்பத்தால் பிரச்சனை இருக்கின்றது. அதை நாம் அளவாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனுமதி இல்லாமல் அதிகம் பயன்படுத்தும் பொழுது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் பல நல்லதும் செய்யலாம். படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தை காண்பித்துள்ளனர். AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அதுபோன்று நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். சூர்யா படத்தில் நடிப்பதற்காக தற்போது கோவை வந்துள்ளேன். நடிகர் விஜய் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு, அது அவருடைய தனிப்பட்ட முடிவு, அரசியலுக்கு வந்த விட்டார். பொதுக்கூட்டங்கள் போட்டு விட்டார். என்னை பொருத்தவரைக்கும் அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம். அதே சமயம் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தியது எங்களைப் போன்றவர்களுக்கு எல்லாம் மன வருத்தமாக உள்ளது. தமிழிழும் நிறைய படங்கள் பிரம்மாண்டமான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்போது வந்து கொண்டிருக்கிற படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமான படங்கள்தான். அது கண்டன்ட்டை வைத்து தான் நீங்கள் பார்க்க வேண்டும். கங்குவா ஒரு நல்ல படம். சில நேரங்களில் அது ஆடியன்ஸ்க்கு போய் சேரும். தற்போது அது சேரவில்லை. கண்டிப்பாக இரண்டாம் பாகம் வந்தால் புரிவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மொத்தமாக பார்த்தால் தான் அது தெரியும். அதைப் பார்க்காமல் முதல் பாகத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வருவது சரியல்ல. தற்போது வரைக்கும் இரண்டு மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றேன். இன்னமும் அதற்கு பெயர் வைக்கவில்லை. கூடிய சீக்கிரம் ஒளிப்பதிவாளராக என்னை பார்க்கலாம். சதுரங்க வேட்டை படம் போல பல பல மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தப் படம் வரும்போது இந்த பிரச்சனைகள் இருந்தது. இப்போதும் அந்த பிரச்சனைகள் இருக்கின்றன. அது ஒரு விழிப்புணர்வு படம். புஷ்பா 2 திரைபடம் இன்னமும் பார்க்கவில்லை. சில வேலைகள் உள்ளது, அதை முடித்த பின்னர் தான் படம் பார்க்க வேண்டும் என்றார்.

Related Post