ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4 ஆம் தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் இன்னலுக்குள்ளாகியுள்ள அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்படி படகுகளை மீட்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப் படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுக மீனவர்களை நெடுஞ்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்கள் காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பது வாடிக்கையாகி வரும் நிலையில் இது குறித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage