டமாஸ்கஸ்: சிரியாவில் இருக்கும் கிறிஸ்துவர்கள் வரும் நாட்களில் வெளியேற்றப்படலாம்.. அல்லது நாட்டை விட்டு பாதுகாப்பான் இடங்களுக்கு அவர்கள் வெளியேறலாம் என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
சிரியாவில் கிளற்சியாளர்களின் ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) குழு நாட்டை கைப்பற்றி உள்ளது. 50 வருடமாக நிலவி வந்த.. சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டது.
சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கே ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளி குழுதான் காரணம்.
அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. அபு முகமது அல்-ஜோலானி மிகவும் இளம் தலைவர் என்றாலும் அவருக்கு ராணுவ ரீதியாக நிறைய அறிவு உள்ளது. அதேபோல் அரசியல் ரீதியாகவும் நிறைய அறிவு உள்ளது.
ஆனால் இவர் கிறிஸ்துவர்களுக்கு எதிரானவர். சிரியாவில் இஸ்லாமியர்கள் மக்கள் தொகைக்கு இணையாக கிட்டத்தட்ட கிறிஸ்துவர்கள் மக்கள் தொகையும் உள்ளது. ஒருகாலத்தில் கிறிஸ்துவர்கள் மெஜாரிட்டி இருந்த நாடாகவும் இருந்தது. இந்த நிலையில்தான் சிரியாவில் இருந்து கிறிஸ்துவர்கள் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
யார் இவர்?: 1982 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாத்தில் பிறந்த அபு முகமது அல்-ஜோலானி சாதாரண குடும்ப பின்புலத்தை கொண்டவர். அவரது தந்தை பெட்ரோலியம் பொறியாளராக பணியாற்றினார். இவர்கள் 1989 இல் சிரியாவுக்குத் சென்றனர், டமாஸ்கஸ் அருகே குடியேறினர்.
2003 இல் அவர் ஈராக்கிற்குச் செல்வதற்கு முன்பு டமாஸ்கஸில் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை. அப்போதுதான் ஈராக் உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வந்தது. அமெரிக்காவை எதிர்க்கும் விதமாக ஈராக்கில் அல்-கொய்தாவில் அபு முகமது அல்-ஜோலானி சேர்ந்தார். அங்கே பின் லேடனுக்கு மிகவும் நெருக்கம் ஆனார்.
2006 இல் ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு, ஐந்து வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்-ஜூலானி, பின்னர் சிரியாவில் அல்-கொய்தாவின் கிளையை நிறுவும் பணியில் ஈடுபட்டார், அல்-ஜுலானி அந்த ஆரம்ப ஆண்டுகளில் அல்-கொய்தாவின் "இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக்கின்" தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதியுடன் பணியாற்றி வந்தார், அது பின்னர் ISIL (ISIS) ஆனது.
ஏப்ரல் 2013 இல், அல்-பாக்தாதி அல்-கொய்தாவுடனான உறவுகளைத் துண்டித்து, சிரியாவில் தனியாக வளரப்போகிறோம் என்று அறிவித்தார்,. ஆனால் அபு முகமது அல்-ஜோலானி தொடர்ந்து அல் கொய்தாவுடன் நட்பாக இருக்க விரும்பினார். 2016 இல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் ஏற்பட்ட கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக ஜோலானி 2017 HTS அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பை உருவாக்கி வெறும் 7 வருடங்களில் சிரியாவில் போரை முடித்து அங்கே வென்றுள்ளார் அபு முகமது அல்-ஜோலானி.
கிறிஸ்துவ எதிர்ப்பு: 2014 இல் தனது முதல் தொலைக்காட்சி நேர்காணலின் போது, அல் ஜசீராவிடம் பேசுகையில்.. நான் ஆட்சிக்கு வரும் இடங்களில் எல்லாம் "இஸ்லாமிய சட்டம்" கொண்டு வரப்படும். சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் அலாவிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவித்தார். தற்போது அதிபர் ஆசாத் தலைமறைவாகி உள்ள நிலையில் அபு முகமது அல்-ஜோலானி அங்கே நாட்டின் தலைவராகும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் வரும் நாட்களில் சிரியாவில் இருக்கும் கிறிஸ்துவர்கள் வரும் நாட்களில் வெளியேற்றப்படலாம்.. அல்லது நாட்டை விட்டு பாதுகாப்பான் இடங்களுக்கு அவர்கள் வெளியேறலாம் என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
போராளி குழுக்கள்: அவருடன் தற்போது 10க்கும் மேற்பட்ட போராளி குழுக்கள் கைகோர்த்து உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை கிட்டத்தட்ட 50 வருடங்களாக போராடி வருகிறது. அந்த போர் இன்று ஆசாத் வீழ்ச்சி காரணமாக முடிவிற்கு வந்துள்ளனர்.
இவர் சிரியா அதிபர் ஆசாத் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களை கைப்பற்ற கைப்பற்ற அங்கே புதிய இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வந்தார். புதிய கல்வி முறை தொடங்கி மருத்துவம், வீடுகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கினார். அதோடு இல்லாமல் கடுமையான தண்டனைகளையும் அறிவித்தார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage