பழங்குடி மக்களின் கல்விக்காக பாடுபடும் கேஐஐடி நிறுவனர் அச்சுதா சமந்தாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

post-img
புவனேஸ்வர்: பழங்குடி மக்களின் கல்விக்காக பாடுபட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி (கேஐஐடி) நிறுவனர் அச்சுதா சமந்தாவுக்கு 64-வது கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கேஐஐடி, கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (கேஐஎஸ்எஸ்) போன்ற உயர்கல்வி நிறுவனங்களை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நிறுவி கல்விச் சேவையாற்றி வருகிறார் அச்சுதா சமந்தா. இன்ஸ்டிடியூட்டின் தலைவராகவும், நிறுவனராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை இலவச கல்வியை அளித்து சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் பெங்களூரு அலையன்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது அவருக்குக் கிடைத்துள்ள 64-வது கவுரவ டாக்டர் பட்டமாகும். பெங்களூரு நகரில் நடைபெற்ற அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் அச்சுதா சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. கல்வித் துறையிலும், சமூகச் சேவைத் துறையிலும் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருதை அலையன்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியது. இது குறித்து டாக்டர் அச்சுதா சமந்தா கூறியதாவது: சமூகத்தின் முன்னேற்றத்துக்காக கடந்த 33 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறேன். இந்த கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கோவா மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, நிதி ஆயோக் உறுப்பினரும், ஜேஎன்யு பல்கலைக்கழக வேந்தருமான பத்ம பூஷண் டாக்டர் விஜய்குமார் சரஸ்வத், கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, கர்நாடக மேலவைத் தலைவர் பசவராஜ் ஹோரட்டி, இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post