திருப்பத்தூர்: இனிமேல் கணவருடன் எந்த தகராறும் செய்யாமல், ஒற்றுமையாக வாழ்வேன் என்று திருப்பத்தூர் போலீசில் உத்தரவாதம் தந்தார் மனைவி.. இதை நம்பிய கணவர் வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில்தான் இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.
திருப்பத்தூர் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.. இவரது மனைவிக்கு 39 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 4 பெண்கள் இருக்கிறார்கள்.. இதில் 3 பெண்களுக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகள் மட்டும் மாற்றுத்திறனாளி என்பதால், பெற்றோருடனேயே தங்கியிருக்கிறார்.
கட்டிட வேலை: இந்தநிலையில், யாரோ ஒருவருடன், மனைவிக்கு தொடர்பு இருப்பதாகவும், கட்டிட வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, அந்த நபரை தனிமையில் சந்தித்து வருவதாகவும், கணவனுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த கணவர், மனைவியின் நடத்தையை ரகசியமாக கண்காணிக்க துவங்கினார்.
அப்போதுதான், மனைவிக்கு ஆசையாக வாங்கி தந்த இரண்டரை சவரன் நகை, மனைவியின் கழுத்தில் இல்லாததை கவனித்துள்ளார்.. இது குறித்து மனைவியிடம் கேட்க போய், இறுதியில் தம்பதிக்குள் தகராறும், பிரச்சனையும் வெடித்துள்ளது.
உடனே திருப்பத்தூர் மகளிர் ஸ்டேஷனில், கணவன் மீது மனைவி புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார், தம்பதியை வரவழைத்து சமாதானம் பேசினார்கள்.. அப்போது, இனி எந்த தவறையும் செய்யாமல், கணவரிடம் ஒழுங்காக நடந்து கொள்வதாக மனைவி உத்தரவாதம் தந்தார். இதையடுத்து, இருவரையும் சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.
மாற்றுத்திறனாளி: இப்படிப்பட்ட சூழலில், ஓசூரில் கட்டிட வேலைக்காக சென்றிருந்தார் கணவர்.. வெளியூருக்கு வந்துவிட்டதால், மனைவிக்கு போன் செய்துள்ளார்.. ஆனால் அவரது போன் பிஸியாகவே இருந்துள்ளது. எப்போது போன் செய்தாலும், பிஸியாக இருந்ததால் ஆத்திரமடைந்தார். அதுமட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளி மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஏரிக்கரை பகுதியிலுள்ள வாழைத்தோப்புக்குள் ஆண்நண்பரை சந்திப்பதற்காக மனைவி செல்வதாக, ஓசூரிலுள்ள கணவருக்கு யாரோ நலம்விரும்பிகள் போன் செய்து சொல்லி உள்ளனர்.
இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த கணவர், கிராமத்திற்கு சென்று மனைவியை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முடிவு செய்தார். எனவே, கிராமத்துக்கு வரப்போகும் தகவலை வீட்டுக்கு தராமல், ஓசூரிலிருந்து கிளம்பினார்.
போன் பிஸி: அன்றைய தினம் இரவே, தன்னுடைய கிராமத்துக்கும் வந்துவிட்டார். ஆனால், வீட்டுக்கு போகாமல், அந்த பகுதியிலேயே மறைந்துகொண்டு, மனைவிக்கு போன் செய்துள்ளார். இப்போதும் மனைவியின் செல்போன் பிஸியாகவே இருந்துள்ளது.. சிறிது நேரத்துக்கு பிறகு, எதுவுமே தெரியாததுபோல கணவரிடம் போனில் பேசிய மனைவி, தூங்க போவதாக சொல்லி போனை துண்டித்துவிட்டார்.
ஆனால் சிறிது நேரத்தில், இரவு 10.30 மணியளவில், தன்னுடைய வீட்டில் இருந்து நைசாக வெளியேறியிருக்கிறார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர், மனைவிக்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
ஏரிக்கரை: அந்த பெண், நேராக ஏரிக்கரை பகுதிக்கு நடந்து சென்று, அங்கிருந்த வாழைத்தோப்புக்குள் நுழைந்துவிட்டார்.. தோப்பில் ஏற்கனவே காத்திருந்த ஆண் நண்பருடன் சேர்ந்து தண்ணி அடித்து தனிமையில் இருந்திருக்கிறார். இதற்குமேல் பொறுமையிழந்த கணவர், கீழே கிடந்த கற்களை எடுத்து அவர்கள் மீது ஆவேசமாக வீச தொடங்கினார்.. இதில் மனைவியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அந்த ஆண் நண்பரோ, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.. அப்போதும் கோபம் அடங்காத கணவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆண் நண்பரின் பைக்கில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார்..
தாக்குதல்: இதனிடையே மண்டை உடைந்து அந்த பெண் கதறி துடிக்கவும், அவரது அலறல் சத்தத்தை கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து, அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக திருப்பத்தூர் தாலுகா போலீஸார், கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.