பஞ்சாயத்தை விடுங்க..பாகுபலி, டங்கலை பந்தாடும் புஷ்பா-2! அல்லு அர்ஜுனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்!

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்னும் சில நாட்களில் படத்தின் வசூல் 2000 கோடி ரூபாயை எட்டும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 கோடி ரூபாய் வசூலை எட்டிய படம் என்ற சாதனையை புஷ்பா-2 படைக்க இருக்கிறது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா-2 படத்த்துக்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். புஷ்பா முதல் பாகத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். புஷ்பா-2: புஷ்பா முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலிலா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். முதல் பாகம் வெறும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இரண்டாம் பாகம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில், தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். வசூல் சாதனை: தற்போது புஷ்பா 2 தி ரூல் படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியாகி இருக்கும் நிலையில், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வசூல் வேட்டை செய்து வருகிறது. மாஸ் ஆக்சன் படமான புஷ்பா 2 படம் வெளியான சில நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டியது. அதிவேகமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய திரைப்படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 பெற்றுள்ளது. ரூ.1800 கோடி வசூல்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், ரீலீசான தேதியில் இருந்து இந்த படம் வெறும் 21 நாட்களில் ரூ.1800 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் ரிலீசான போது அல்லு அர்ஜுனை பார்க்க வந்த பெண் நெரிசலில் சிக்கி பலியானது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதையடுத்து படத்துக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்தது. 2000 கோடி ரூபாய் வசூல்: இதனை அடுத்து புஷ்பா 2 படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்னும் சில நாட்களில் படத்தின் வசூல் 2000 கோடி ரூபாயை எட்டும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 கோடி ரூபாய் வசூலை எட்டிய படம் என்ற சாதனையை புஷ்பா-2 படைக்க இருக்கிறது. அதிக வசூல் செய்த படம்: இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிகபட்சமாக ஆமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் படம் 1950 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதற்கு அடுத்த இடத்தில் 1810 கோடி ரூபாய் வசூலுடன் பாகுபலி-2 இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்போது 1800 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 தாண்டி இருக்கும் நிலையில் விரைவில் அந்த இரு படங்களின் சாதனையை முறியடித்து 2000 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைக்க இருக்கிறது. அல்லு அர்ஜூன் சம்பளம்: புஷ்பா 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் 300 கோடி ஊதியமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பர்சன்டேஜ் அடிப்படையில் 20% என்று வைத்தாலும் 400 கோடி ரூபாய் அல்லு அர்ஜுனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி ரிலீஸ் எப்போது?: புஷ்பா திரைப்படம் வசூலி பட்டையை கிளப்பி வரும் நிலையில் ஓடிடி வெளியீடு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜனவரி இரண்டாவது வாரத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது வதந்தி எனக் கூறிய மைத்ரி மூவி மேக்கர்ஸ், 56 நாட்களுக்கு பின்பு தான் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறியிருந்தது. அதன் மூலம் பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தான் ஓட்டிட்டியில் புஷ்பா-2 வெளியாகும் என கூறப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post