குருப்பெயர்ச்சி 2025: வெச்சு செய்யப் போகும் குரு.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்

post-img
குருப்பெயர்ச்சி 2025: புத்தாண்டு பிறக்க இன்று ஓரிரண்டு நாட்களே உள்ளன. இந்த ஆண்டின் அரிய நிகழ்வாக சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் குருவின் அமைப்பு காரணமாக எந்தெந்த ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Gurupeyarchi 2025) கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம். புத்தாண்டு பிறக்கப் போகிறது. 2025 புத்தாண்டு பல அதிர்ஷ்டங்களையும், மகிழ்ச்சியையும், வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் அள்ளித் தர வேண்டும் என்பது தான் பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கும். 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். குருப்பெயர்ச்சி மற்றும் அதிசார பெயர்ச்சி காரணமாக சில ராசிக்காரர்களுக்கு யோகமும், சில ராசிக்காரர்களுக்கு பாதகங்களையும் ஏற்படுத்தும். வரும் குருப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிகள் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், மே மாதம் 14 ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத்தொடர்ந்து, அக்டோபர் 18 ஆம் தேதியில் அதிசார பெயர்ச்சியை மேற்கொண்டு மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவம்பர் 11 ஆம் தேதி வக்கிர கதியில் பின்னோக்கி நகர்ந்து மீண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி கடகத்தில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புவார். குரு பகவான் மிதுனத்தில் சஞ்சரிப்பதாலும், அதிவேகமாக நகர்ந்து கடகத்தில் சஞ்சரிக்கும்போதும் குருவின் அமைப்பு காரணமாக எந்தெந்த ராசிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.. எதில் கவனமாக இருக் வேண்டும் என்று பார்ப்போம். மிதுனம் (Guru peyarchi for midhunam): குருவின் அமைப்பு மாற்றத்தால் 2025 புத்தாண்டில் மிதுன ராசிக்காரர்கள் நிதி சார்ந்த விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியான பல்வேறு திடீர் மாற்றங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. கண்மூடித்தனமான நம்பிக்கை மற்றும் அவசரமாக எடுக்கப்படும் முடிவுகளால் தோல்வியை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதனால், உங்களுக்கு நிதி இழப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை கவனமாகச் செய்வது நல்லது. அதில் உள்ள ஆபத்தான விஷயங்களை உணர்ந்து செயல்படுவது நல்ல பலனைத் தரும். வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத வாக்குவாதம், தகராறுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. தனுசு (Guru peyarchi for dhanusu): தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் இடப்பெயர்ச்சியால் அவரது பார்வை கிடைத்தாலும், குருவின் மாற்றத்தால் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. தவறான புரிதல்களால் பிரச்னைகளில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய விரும்புபவர்கள் உரிய நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. ஆலோசனையின்றி செய்யப்படும் முதலீடுகளால் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அனைவரிடமும் விட்டுக் கொடுத்தும். அன்பாகவும் செல்வது நல்லது. மகரம் (Guru peyarchi for magarm): 2025 புத்தாண்டில் இடம்பெயரும் குருவால் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, தொழில் போன்றவற்றில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கெட்ட பழக்கங்களிலும், விஷயங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வேலை, தொழில் விஷயங்களில் பெரிய முதலீடுகளைச் செய்யும்போது நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வேலையை மாற்ற வேண்டும் நினைப்பவர்கள் பொறுமையாக இருப்பது நல்லது. புதிய வேலைக்கான ஆணை கிடைத்தாலும், அங்குள்ளி சவால்கள் குறித்து தெரிந்து கொண்டு மாறுதல் குறித்து ஆலோசிப்பது நன்மையைத் தரும். மீனம் (Guru peyarchi for meenam): மீன ராசிக்காரர்களின் சுக ஸ்தானத்துக்கு குரு வருவதால் ஏற்றத்தையும் அள்ளிக் கொடுப்பார். அதோபோல இறக்கத்தையும் ஏற்படுத்துவார். இந்த ஆண்டில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதேசமயம் விரையச் செலவுகள் அதிகரிப்பதற்கான சூவலும் உருவாகும். நிலம் வாங்குவதிலும், விற்பதிலும் கவனமாக இருப்பது நல்லது. நிதான முடிவெடுத்து இந்த காரியங்களைச் செய்வது நல்ல பலன்களைத் தரும். உங்களுடைய பணிச் சுமைகள் அதிகரிக்கும். வேலை சுமை காரணாக மன அழுத்தம், சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் இலக்கை அடைவதில் சவால்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. என்னவிதமான பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொண்டு அதற்கான தீர்வைக் காண்பது நல்லது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post