இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்ட மீட்பர்! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

post-img
டெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 92 வயதான மன்மோகன் சிங், இதற்கு முன்னரும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தற்போது என்ன காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 1932ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த மன்மோகன் சிங், நிதியமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தினார். அதற்கு முன்னர் இந்தியா ஏறத்தாழ சோசலிச நாடுகளின் பாணியிலான பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தது. ஆனால் அதில் ஏராளமான ஊழல்களும், பிரச்னைகளும் இருந்தன. இது நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதித்து, பொருளாதார சரிவை ஏற்படுத்தியது. எனவே இந்த பொருளாதார கொள்கைளை மாற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகுந்த முனைப்புடன் இருந்தது. 1991-1996 வரையிலான பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் மன்மோகன் நிதியமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அந்த மேஜிக்கை நடத்தி காட்டினார் மன்மோகன் சிங். இந்த காலத்தில்தான் புதிய பொருளாதார கொள்கை இந்தியாவில் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது. இன்று பாஜக அரசு பின்பற்றி வரும் தனியார் மயம் மற்றும் நவீன் தாராளமய பொருளாதார கோட்பாட்டுக்கு வித்திட்டவர் மன்மோகன் சிங்தான். மன்மோகன் சிங், நவீன இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியதாக காங்கிரஸ் இன்றுவரை அவரை கொண்டாடி வருகிறது. 1991ம் ஆண்டு முதல் முதலாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங், 1998 முதல் 2004 வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். கடந்த ஏப்ரலில் அவர் தன் நாடாளுமன்ற பயணத்தை முடித்துக்கொண்டார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post