மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைத்தது. அங்கு இப்போது என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைத்த நிலையில், அங்கு இப்போது அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. பாஜகவில் இருந்து 19 பேருக்கும் கூட்டணி கட்சியில் இருந்து 20 பேருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் தேர்தல் நடந்தது. அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். காங்கிரஸ்- அஜித் பவார்- தாக்கரே கூட்டணி மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்தது.
முதல்வர்: முன்பு அங்கு ஷிண்டே முதல்வராக இருந்த நிலையில், இதனால் இந்த முறை என்பதில் முதலில் கேள்வி இருந்தது. தான் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்று ஷிண்டே கூறுவதாகவும் தகவல் வெளியானது. இதனால் அங்கு முதல்வர் யார் என்று அறிவிப்பதில் தாமதம் நிலவியது. இதனால் அங்குத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் ஒரு வாரத்திற்கு மேல் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.
அதன் பின்னரே தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து ஃபட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், அஜித் பவார் மற்றும் ஷிண்டே துணை முதல்வராகப் பதவியேற்றனர். இருப்பினும், அப்போது வேறு யாரும் அமைச்சர்களாகப் பதவியேற்கவில்லை. இந்தச் சூழலில் இன்று அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் பாஜகவில் இருந்து 19 பேருக்கும் கூட்டணிக் கட்சியில் இருந்து 20 பேருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம்: இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில் 19 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர். சிவசேனாவில் இருந்து 11 பேருக்கும் என்சிபி கட்சியில் இருந்து 9 பேருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் மற்றும் ஷிண்டே துணை முதல்வர்களாகவும் பதவியேற்றுள்ள நிலையில், இப்போது அங்கு அமைச்சரவையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்கு அதிகபட்சமாக 43 பேர் அமைச்சர்களாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாக்பூரில் உள்ள ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஷிண்டே மற்றும் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாருக்கெல்லாம் இடம்: மகாராஷ்டிரா பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே மற்றும் ஆஷிஷ் ஷெலர், கணேஷ் நாயக், மங்கள் பிரபாத் லோதா, பங்கஜா முண்டே, கிரீஷ் மகாஜன், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சந்திரகாந்த் பாட்டீல், நித்தேஷ் ரானே என மொத்தம் 19 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அதேபோல ஷிண்டே சிவசேனாவில் இருந்து குலாப்ராவ் பாட்டீல், தாதா பூஸ், சஞ்சய் ரத்தோட், உதய் சமந்த், சம்புராஜ் தேசாய், சஞ்சய் ஷிர்சாத், பிரதாப் சார்நாயக், பாரத்சேத் கோகவாலே, பிரகாஷ் அபித்கர், ஆஷிஷ் ஜெய்ஸ்வால், யோகேஷ் கடம் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அஜித் பவாரின் என்சிபி கட்சியில் இருந்து ஹசன் முஷ்ரிப், தனஞ்சய் முண்டே, தத்தா மாமா பார்னே, அதிதி தட்கரே, மாணிக்கராவ் கோகடே, நர்ஹரி ஸிர்வால், மக்ரந்த் அபா பாட்டீல், பாபாசாகேப் பாட்டீல், இந்திரனீல் நாயக் ஆகியிருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.