சென்னை: சென்னையில் மக்கள் பல நாட்களாக வைத்து வரும் கோரிக்கை ஒன்றை நிறைவேற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அண்ணாசாலை, கடற்கரை சாலை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட 13 பாதசாரி சுரங்கப்பாதைகளை சீரமைக்க உள்ளதாக CMDA அறிவித்து உள்ளது. மொத்தமாக சுரங்கபாதையின் டிசைன் மாற்றம், நுழைவு வாயில், பாதைகளை மாற்றுவது, பேனிக் பட்டன் அமைப்பது , சிசிடிவி கேமராக்கள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள் அமைப்பது.
வெயிலை தணிக்கும் நடவடிக்கைகள் மற்றும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதைகள் ஆகியவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நான்கு சுரங்கப்பாதைகள் முழுமையான புதுப்பித்தலுக்கு உட்படும். மற்ற சில பாதைகள் திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் சிறிய மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படும்.
உள்ளே கடைகள் அமைப்பதை தடுக்கவும்.. மக்கள் தங்குவதை தவிர்க்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னையை மாடர்ன் நகரமாக மாற்றும் திட்டத்தின் கீழ் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இது போக சென்னை மாநகராட்சி கடந்த 30 ஆண்டுகளாக கைவிடப்பட்ட பெருங்குடி-வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷன் ரோடு முழுமையாக மாற்றப்பட உள்ளது என்று அறிவித்து உள்ளது. அண்ணாநகர் போல இதை மாற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இங்கே உணவு கடைகள், பசுமையான இடங்கள், நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது. 24 மணி நேரம் கடைகள் இயங்கும் வகையில் இங்கே மாற்றங்களை செய்ய உள்ளனர்.
கடந்த மாதம் தெற்கு ரயில்வேயிடம் இருந்து சாலைப் பராமரிப்புப் பணிகளை பெரு சென்னை மாநகராட்சி கையகப்படுத்தியது. சாலையை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகரை நியமித்துள்ளது. ஜிசிசி இந்த சாலையை 15 கோடி செலவில் முழு வீதியாக மாற்றும் முடிவை கையில் எடுத்துள்ளது.
இந்த சாலையை இரவு நேர கொண்டாட்டங்களுக்கான மாற்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தரமணி மற்றும் பெருங்குடிக்கான முக்கியமான இணைப்பாக இந்த 3-கி.மீ தூரம் அமைந்துள்ளது. MRTS நிலையங்களுக்கும் வேளச்சேரி 100 அடி சாலைக்கும் இடையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இரவு நேர ஃபுட் ஸ்ட்ரீட் தொடங்கி கொண்டாட்ட மையங்கள் வரை பல இங்கே அமைக்கப்பட உள்ளன. பெங்களூர் சர்ச் ஸ்ட்ரீட் போல இங்கே அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ள வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. ஜனவரியில் தொடங்கும் பணிகள், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் முடிக்க உள்ளனர். இந்த இடத்தை பொதுமக்களுக்கான ஹேங்கவுட் இடமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு பணிகள் நடக்க உள்ளன.
வேளச்சேரியில் இருந்து OMR க்கு செல்லும் பல பயணிகளுக்கு போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை முக்கியமான ஒன்றாகும். CMRL கட்டுமானத்தால் ஏற்படும் போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக தொந்தரவு இல்லாமல் பெருங்குடியை அடைய இது ஒரு குறுக்குவழியாகும்.
ஆனால், சாலையின் பெரும்பகுதி பள்ளங்களால் நிறைந்து, மழை நாட்களில் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. மோசமான நிலை காரணமாக இந்த சாலை வெள்ளத்தில் மூழ்கும்நிலையில் உள்ளது. இதனால் வேளச்சேரி - பெருங்குடி இடையே இருவழிப் போக்குவரத்திற்கு பயணிகள் ஒரு வழிப்பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதை மனதில் வைத்து கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ள வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.