ஜீவனாம்சம் டார்ச்சர்! தற்கொலை செய்த கணவர் சுபாஷ்.. போலீசில் மனைவி அளித்த ஷாக் வாக்குமூலம்.. ட்விஸ்ட்

post-img
பெங்களூர்: பெங்களூர் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் கைதான் அவரின் மனைவி நிகிதா சிங்கானியாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் போலீசாரிடம் நிகிதா சிங்கானியா முக்கியமான சில விஷயங்களை வாக்குமூலமாக தெரிவித்தாக கூறப்படுகிறது. நான் அதுல சுபாஷை துன்புறுத்தியதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. சுபாஷ்தான் என்னை கொடுமைப்படுத்தினார். என்னை தினமும் தினம் தொல்லை செய்தார். எனக்கு முக்கியமாக.. வரதட்சணை கொடுமை கொடுத்தார். என் அப்பா மரணத்திற்கு வரதட்சணை கொடுமைதான் காரணம். சுபாஷ் கேட்ட வரதட்சணை காரணமாக அதிர்ச்சி அடைந்த என் அப்பா.. மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். வரதட்சணை தந்தால் ஒன்றாக இருக்கலாம் இல்லை என்றால் முடியாது என்று சுபாஷ் கூறியதால் அதிர்ச்சி அடைந்த என் அப்பா மாரடைப்பு ஏற்பட்ட பலியானார். நான் எனது முன்னாள் கணவர் அதுலிடமிருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறேன். பணத்துக்காக அவரை துன்புறுத்தியிருந்தால் நான் ஏன் அவரை பிரிந்து இருந்திருக்க வேண்டும். அவருடனே இருந்திருப்பேன் அல்லவா? சுபாஷ் வைத்த குற்றச்சாட்டுகள் மிக மிக தவறானது. இந்த வழக்கில் நிகிதா சிங்கானியா (29), அவரது தாயார் நிஷா சிங்கானியா, இளைய சகோதரர் அனுராக் சிங்கானியா (27) ஆகியோர் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிகிதா சிங்கானியாவின் மாமா சுஷில் சிங்கானியாவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பின்னணி: பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் சமீபத்தில் மனைவி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார். அவர் தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி 24 பக்க குறிப்பு மற்றும் 90 நிமிட வீடியோவை விட்டுச் சென்றார். அவரின் தற்கொலை சம்பவம் நாடு முழுக்க சர்ச்சையானது. பெண்களுக்கு ஆதரவாக மட்டுமே சட்டங்கள் இருப்பதாக வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மனைவி என்னை கொடுமைப்படுத்தினார்.. அதோடு இல்லாமல் விவாகரத்து வழக்கில் நியாயமே இல்லாமல் பல லட்சங்களை ஜீவனாம்சமாக கேட்டார். வழக்கு நடத்திய நீதிபதியும் என்னிடம் லஞ்சம் கேட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை சுபாஷ் அடுக்கி உள்ளார். இந்த விவகாரம் புதிய திருப்பத்தை அடைந்து உள்ளது. அதன்படி, சுபாஷின் தந்தை பவன் குமார் மீது மருமகள் நிகிதா சிங்கானியா வழக்கு பதிவு செய்துள்ளார். தனது மகன் மூலம்.. தனது மாமனாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். அதாவது உங்கள் பேரனுக்கு பராமரிப்பிற்கு பணம் கொடுக்க வேண்டும்.. அதற்காக ஜீவனாம்சம் கொடுங்கள் என்று வழக்கு பதிவு செய்துள்ளார். சுபாஷ் -நிகிதா தம்பதியின் மகன் மைனர் என்பதால்.. அவர் சார்பாக நிகிதா தனது மாமனார் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். ஏற்கனவே தற்கொலைக்கு தூண்டியதாக சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை போலீசார் கைது செய்தனர். அதோடு அவரின் அம்மா, தம்பியையும் கைது செய்தனர்.

Related Post