அண்ணே ஒரு ‘கை’ பாத்துருவோம்.. விஜய்யிடம் வெடித்துக் கிளம்பிய நிர்வாகிகள்! சாஃப்டாக சொன்ன ஒரே பதில்!

post-img
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தேர்தல் அற்விக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆனால் திமுக உள்ளிட்ட கட்சிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தவெக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி 2026 சட்டமன்ற தேர்தலில் தவிர எந்த தேர்தலிலும் போட்டியில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் விஜய் என்கின்றனர் சீனியர் நிர்வாகிகள். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அரசியலில் குதித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதற்குப் பிறகு உறுப்பினர்கள் சேர்க்கை, கொடி அறிமுகம், கொள்கை பாடல் வெளியீடு முதல் மாநில மாநாடு என அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். இடையிடையே பல்வேறு விவகாரங்கள் குறித்து அறிக்கை வெளியிடுவது, ட்வீட் போடுவது எனவும் அரசியல்வாதியாக தன்னை காட்டிக் கொள்கிறார். இந்த நிலையில் இதுவரை நடந்த தேர்தல்களில் தமிழக வெற்றி கழகம் அதிகாரப்பூர்வமாக போட்டியிடவில்லை. தவெக விஜய்: ஆனால் அதற்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜயின் அனுமதியுடன் போட்டியிட்டு சிலர் வெற்றி பெற்றனர். அந்த உற்சாகத்தில் தான் தற்போது அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் விஜய். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு இடையில் எந்த தேர்தலிலும் போட்டி இல்லை என விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அது பலத்த விமர்சனங்களை சந்தித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: குறிப்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிடுவாரா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலிருந்தும் பின் வாங்கினார். காரணம் அதற்கு முன்னதாகவே எந்த தேர்தலிலும் போட்டியில்லை என விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி: ஏற்கனவே இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைந்த நிலையில் அவரது தந்தையும் மறைந்தது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மூன்றாவது முறையாக எம்எல்ஏ தேர்தலில் வாக்களிக்க தயாராகி வருகின்றனர் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள். பொதுவாகஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் ஆறு மாத காலத்திற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தல்: இதை அடுத்து டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் இருக்கும் என்பதால் பிரதான கட்சியான திமுக கூட்டணியும், அதிமுகவும் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா? அல்லது திமுகவே களமிறங்குமா? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக போட்டியா?: இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு டிரைலர் போல ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் இருக்கும் என்பதால் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்று இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என சில நிர்வாகிகள் விஜயிடம் வலியுறுத்தியுள்ளனர். விஜய் மறுப்பு: "2026 சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு தேவையில்லாமல் பிற விஷயங்களில் தலையிட வேண்டாம், மேலும் கட்சியின் தொடக்க விழா பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். தேர்தல், கூட்டணி உள்ளிட்ட முடிவுகளை நானே எடுப்பேன். அதே நேரத்தில் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்படு.ம் எனவே யாரும் எங்கேயும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேச வேண்டாம்" என சாப்டாகவே அறிவுறுத்தி உள்ளாராம்.

Related Post