கருப்பு டைல்ஸில் ’மூன்றாம் கண்’.. உடை மாற்றும் போது அலறிய பெண்கள்! ராஜேஷும் மீரானும் கூட்டாளிகளாமே!

post-img
ராமநாதபுரம்: உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம் அக்னித் தீர்த்த கடற்கரை அருகே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர. கேமரா வைத்தவர்கள் தங்கள் வாயாலேயே சிக்கியது எப்படி? இதுவரை அவர்கள் எடுத்த வீடியோக்கள் என்ன ஆனது?என்பது குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில். அதுமட்டுமல்லாமல் சிறந்த சுற்றுலா தளமாகவும் ராமேஸ்வரம் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகே இருக்கும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு பின்னர், கோவிலுக்கு சென்று அங்கு புனித நீராடுவதும், பின்னர் சாமி தரிசனம் செய்வதும் வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர். அக்னீ தீர்த்த கடல்: தொடர்ந்து அங்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின் கடற்கரை எதிரே உள்ள உடை மாற்றும் அறையில் உடை மாற்றுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அங்கிருந்த டீ மாஸ்டர் வயதான பெண்களை ஒரு அரைறைக்கும், இளம் பெண்களை மற்றொரு அறைக்கும் சென்று உடை மாற்றுமாறு கூறியிருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த ஒரு இளம் பெண் உடை மாற்றும் அறையில் கவனித்த போது அங்கு டைல்ஸ் கற்களுக்கு நடுவே ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரகசிய கேமரா: மேலும் மற்ற இளம் பெண்கள்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த கேமராவை பிடுங்கி இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் விரைந்து வந்து கேமராவை கைப்பற்றியதோடு உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து பெண்களை படம் பிடித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா, அங்கு பணியாற்றிய டீ மாஸ்டர் மீரான் மைதீன் ஆகியோரை கைது செய்தனர். இருவர் கைது: இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார். அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் கேமரா வைத்தது எப்படி?, ரகசியமாக எடுத்த இளம்பெண்களின் வீடியோக்களை என்ன செய்தனர் என்பது குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண்களின் வீடியோ: பெண்கள் உடை மாற்றும் அறையில் கருப்பு மற்றும் வெள்ளை கலரில் டைல்ஸ் பதித்து அதில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கருப்பு கேமராவை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் கருப்பு டைல்ஸ்க்கு நடுவே அந்த கேமரா வைக்கப்பட்டதால் அதை எளிதில் பார்க்க முடியாது. கடந்த சில நாட்களாக நிறைய வீடியோக்களை எடுத்து மெமரி கார்டை மாற்றி மாற்றி வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த வீடியோவை பார்த்து வந்ததோடு, சிலருக்கு அதனை பகிர்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. தீவிர விசாரணை: இதனிடைய வீடியோக்களை வைத்து அவர்கள் பெண்களை மிரட்டினார்களா? சமூக வலைதளங்களில் பதிவிட்டு பணம் பார்த்தார்களா? என விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த வீடியோக்களை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இராமேசுவரத்தில் உள்ள விடுதிகள், உடை மாற்றும் அறைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Post