சென்னை: சென்னையில் உள்ள ESI அலுவலகத்தில் காலியாக உள்ள 56 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் விரைவில் நிறைவடைய உள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் அமைச்சகத்தின் கீழ் பணியாளர் மாநில காப்பீட்டு கழகம் ( Employees state corporation) செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள ESI அலுவலகத்தில் காலியாக உள்ள 56 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்கள் விவரம், கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: இசிஜி டெக்னிஷியன் (06 பணியிடங்கள்), ஒ.டி அஸ்சிஸ்டண்ட் (15), பார்மாசிஸ்ட்(அலோபதிக்) -10, பார்மாசிஸ்ட் (ஆயுர்வேதா) -04, ரேடியோகிராபர் (02), ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலாஜிஸ்ட் (02 பணியிடங்கள்) என மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: இசிஜி டெக்னிஷியன் பணியிடத்திற்கு 2 ஆண்டு டிப்ளமோ பிரிவில் இசிஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஜூனியர் ரேடியோகிராபர் பணிக்கு 2 ஆண்டு டிப்ளமோ ரோடியோகிராபி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர்மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் விண்ணப்பத்தாரர்கள் 12ம் வகுப்பை சயின்ஸ் பாடங்களுடன் முடித்து டிப்ளமோ மெடிக்கல் லேபராட்டரி டெக்னாலஜிஸ்ட் படித்து இருக்க வேண்டும்.
ஓடி அசிஸ்டென்ட் பணிக்கு 10, பிளஸ்2 படிப்புடன் ஓராண்டு ஆபரேஷன் தியேட்டர் பணியில் அனுபவம் கொண்டிருப்பதோடு பார்மசிஸ்ட்(அல்லோபதி) பணிக்கு பார்மஸி பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ பார்மஸி முடித்திருக்க வேண்டும். பார்மசிஸ்ட்(ஆயுர்வேதம்) 12ம் வகுப்பு பாஸாகி பி.பார்ம் படிப்பில் ஆயுர்வேத படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ ஆயுர்வேத பார்முஸி படிப்பை முடித்து 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ரேடியோகிராபர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ ரேடியோகிராபி படிப்பை முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். ஒடி அஸ்சிஸ்டண்ட் பணிக்கு மட்டும் 32 அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு:
இசிஜி டெக்னிஷியன்: ரூ.25,500 - 81,100
ஜூனியர் ரேடியோகிராபர்- ரூ.21,700 - 69,100
ஒடி அஸ்சிஸ்டண்ட்- ரூ.21,700 - 69,100
பார்மாசிஸ்ட் (ஆயுர்வேதா) உள்ளிட்ட இதர பணியிடஙக்ளுக்கு ரூ.29,200 - 92,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்ட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி / எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் பிறகு அறிவிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30.10.2023 ஆகும். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.esic.gov.in/attachments/recruitmentfile/c23c25a3dad3da105d441ef8844b022d.pdf
கிளிக் செய்யவும்.