மனித உலகில் கொஞ்சம் கொஞ்சமாக ஏஐ ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பல்வேறு சேவைகளில் தற்போது ஏஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கிவிட்டது. முக்கியமாக கணினி சார்ந்த துறைகளில் ஏஐ பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
உலகம் முழுக்க சாட் ஜிபிடி தற்போது பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் கொண்ட தேடுபொறி நிறுவனமான இது நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும். அதோடு ஏற்கனவே அளிக்கப்படும் பதில்களை வைத்து.. அது தன்னை தானே
கூகுள் போல் அல்காரிதம் அடிப்படையில் இதை ஏமாற்ற முடியாது. மாறாக இது மெய்நிகர் சிந்திக்கும் திறன் கொண்டது. அதாவது குறிப்பிட்ட எல்லை வரை சுயமாக சிந்தித்து இது பதில்களை வழங்கும். உலகம் முழுக்க உச்சத்தில் இருக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் புதிய பாய்ச்சலாக இந்த சாட் ஜிபிடி பார்க்கப்படுகிறது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் மூலம் இந்த சாட் ஜிபிடி ஏஐ உருவாக்கப்பட்டது. ஓபன் ஏஐ என்பது வருமானம் சாராத நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை உலகின் டாப் பணக்காரர்கள், அறிவியலாளர்கள் இணைந்து உருவாக்கினார்கள். இதை தொடர்ந்து பல்வேறு ஏஐக்கள் உலகம் முழுக்க உருவாக்க தொடங்கி உள்ளன.
வேலை வாய்ப்பு: இந்த ஏஐ காரணமாக மனிதர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக பல்வேறு தொழில்களில் மனிதர்களை ஏஐ மாற்றும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில்தான் 2030 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான மனித வேலைகள் AI மூலம் மாற்றப்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
McKinsey Global Institute என்று அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது. சுமார் 12 மில்லியன் பேர் வேலை இழக்கும் வாய்ப்புகள் ஏற்படும். 12 மில்லியன் பேர் வேறு வேலைகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
McKinsey Global Institute இன் புதிய ஆய்வின்படி, கொரோனா நெருக்கடியின் போது கிட்டத்தட்ட 9 மில்லியன் தொழிலாளர்கள் - 2019 முதல் 2022 வரை தங்கள் வேலைகளை இழந்தனர். இவர்கள் வேறு சிறு சிறு வேலைகளுக்கு சென்றனர். அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளை விட 50% அதிகம் பேர் வேலைகளை இழந்தனர். அப்போது நடந்ததை விட கூடுதலாக 25 சதவிகிதம் பேர்.. அதாவது 12 மில்லியன் பேர் வேலை இழக்க போவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
2030ல் இது நடக்கும். பல துறைகளில் ஏஐ கோலோச்சும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கணினி துறை, ஐடி துறை, மீடியா துறை, வங்கி துறை என்று பல முக்கிய துறைகளில் ஏஐ கோலோச்சும் என்று கூறப்படுகிறது. பல துறைகளில் பணிகள், சேவைகள் ஆட்டோமேட்டிக் ஆகும். இதன் காரணமாக வரும் நாட்களில் இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் வேலைகளை ஏஐ எடுத்துக்கொள்ளும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.